Published : 11 Mar 2021 01:04 PM
Last Updated : 11 Mar 2021 01:04 PM

78 - ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ள அர்த்த நாரீஸ்வரர் கோவில்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சந்தோஷ் அதிமுக
வசந்தம் கார்த்திகேயன் திமுக
எஸ்.பிரபு அமமுக
சண்முகசுந்தரம் மக்கள் நீதி மய்யம்
இர.சுரேஷ் மணிவண்ணன் நாம் தமிழர் கட்சி

ஆன்மீக வரலாற்றில் ரிஷிவந்தியம் பகுதிக்கு அக்காலத்தில் இருந்தே மிக முக்கிய பங்கு உள்ளது. சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களின் கலைத் திறனை வெளிக்காட்டும் விதமாக பல கோவில்களும் இங்கு உள்ளன. ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ள அர்த்த நாரீஸ்வரர் கோவில், ஆதி திருவரங்கம், சோழபாண்டியபுரம் கல்வெட்டுக்களும், ஜம்பை கோவிலும் வரலாற்று ஆய்வாளர்களின் பயிற்சி பகுதியாக விளங்கி வருகிறது.

விவாசயம் சார்ந்த பகுதியாக விளங்கும் இந்த தொகுதியில் கரும்பு விளைச்சலும், அவற்றை மதிப்புக் கூட்டும் சர்க்கரை ஆலைகளும் நிறைந்த பகுதி. இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பைப் பெற்றார்.

மிகவும் பின் தங்கிய பகுதியாக விளங்கும் இத்தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக விளங்குவதால், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்து காணப் படுகின்றனர்.

தொகுதியின் பிரச்சினைகள்

முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே கொண்ட ஒரு தொகுதி ரிஷிவந்தியம் தொகுதி . கடந்த 2017-ம் ஆண்டு முதல் தான் அரசுக் கலைக் கல்லூரி துவங்கப்பட்ட போதிலும், தொழில் சார் பட்டையப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள் இல்லை என்ற குறையோடு, விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களும் இல்லை குறைபாடு தொகுதி வாசிகளிடம் நிலவுகிறது.

தேர்தல் வரலாறு

1962-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்தனும்,1967-ல் திமுகவைச் சேர்ந்த எம்.ஆனந்தனும், 1971-ல் திமுகவைச் சேர்ந்த தர்மலிங்கம், 1977 மற்றும் 1980-ல் காங்கிரஸ் கட்சியின் சுந்தரமும், 1984-ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.சிவராஜூம்,1989-ல் திமுகவைச் சேர்ந்த நடேச உடையாரும், 1991-ல் அதிமுகவைச் சேர்ந்த கோவிந்தராஜூம், 1996 மற்றும் 2001-ல் தமாக சார்பில் எஸ்.சிவராஜூம் 2006-ல் காங்கிரஸைச் சேர்ந்த எஸ் சிவராஜ் அவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2011-இல் தேமுதிகவை சேர்ந்த விஜயகாந்த்தும், 2016-ல் திமுகவை சேர்ந்த வசந்தம் கார்த்திகேயனும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுவரையில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிகப்படியாக காங்கிரஸ் கட்சி 5 முறையும் திமுக 4 முறையும் தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும் அதிமுக, தேமுதிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,35,549

பெண்

1,31,923

மூன்றாம் பாலினத்தவர்

59

மொத்த வாக்காளர்கள்

2,67,531

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கதிர்.தண்டபாணி

அதிமுக

2

வசந்தம் கே.கார்த்திகேயன்

தி.மு.க

3

ஆர்.வின்செண்ட் ஜெயராஜ்

தேமுதிக

4

கே.பி.பாண்டியன்

பாமக

5

செந்தில்குமார்

ஐஜேகே

6

முனியன்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருக்கோயிலூர் வட்டம்(பகுதி) மேலந்தல், காங்கியனூர், பள்ளிச்சந்தல், ஜம்பை, அத்தியந்தல், முக்கம்பட்டி, கொங்கனாமூர், தேவரடியார்குப்பம், செல்லங்குப்பம், சித்தப்பட்டினம், சாங்கியம், ஜா.சிததாமூர், கூவனூர், மிலாரிப்பட்டு, அரும்பாபாக்கம், கீழ்த்தாயனூர், மேலத்தாயனூர், கனகநந்தல், டி.கீரனூர், கரடி, பூமாரி, முடியனூர், தகடி, எடையூர், அருதங்குடி, மாடாம்பூண்டி, இரும்பலக்குறிச்சி, தேவியந்தல், நரியத்தல், திருப்பாலபந்தல், துரிஞ்சிப்பட்டு, நெடுமுடையான், தனகநந்தல், வெண்மார், ஏரவலம், பெரியானூர், வேங்கூர், அரியூர், திம்மச்சூர், சிவனார்தாங்கல், கோளப்பாரை, பரடாப்பட்டு, சுவாமிமலை (ஆர்.எப்), பாடியந்தல், பொ.மெய்யூர், பொன்னியந்தல், கோமலூர், பனப்பாடி, கோணக்கலவாடி, தத்தனூர், சோழவாண்டிபுரம், செங்கனாங்கொல்லை, மேமாரூர், கிடியார், பழங்கூர், ஆலூர், மொகலார் மற்றும் கச்சிக்குவச்சான் கிராமங்கள். மணலூர்பேட்டை (பேரூராட்சி) சங்கராபுரம் தாலுக்கா (பகுதி) லக்கிநாயக்கன்பட்டி, பவுஞ்சிப்பட்டு, மணலூர், வடகீரனூர், உலகலப்பாடி, மேல்சிறுவரூர், மூங்கில்துறைப்பட்டு, பொருவளுர், ஈருடையாம்பாடு, மங்கலம், ஆதனூர், பொரசப்பாட்டு, சுத்தமலை, அறக்காவடி, ஸ்ரீபாதநல்லூர், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, மணியந்தல், சிறுபனையூர், சீர்ப்பனந்தல், அரும்பராம்பட்டு, வடமாமண்டூர், அருளம்பாடி, வடபொன்பரப்பி, ராயசமுத்திரம், பிரம்மகுண்டம், ராவத்தநல்லூர், புதுப்பட்டு, ரங்கப்பனூர், பாக்கம், தொழுவந்தாங்கல், காணங்காடு, பெரிய கொள்ளியூர், சின்னக் கொள்ளியூர், எடுத்தானூர், கடம்பூர், ஓடியந்தல், வாணாபுரம், நாகல்குடி, அத்தியூர், கடுவனூர், அரியலூர், ஏந்தல், மரூர், லாகூடலூர், அவிரியூர், பொரப்பலாம்பட்டு, யால், பெரியகண்டை, மையனூர், மேலப்பழங்கூர், நூரோலை, கீழ்ப்பாடி, பாசார், முனிவாழை, பிரிவிடையாம்பட்டு, அலியாபாத், மண்டகப்பாடி, முட்டிய, வெங்கலம், பாவந்தூர், சாத்தப்புத்தூர், பேரால், சித்தால், சித்தேரிப்பட்டு, பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளாநந்தல், பீளமேடு, ரிஷிவந்தியம், களையநல்லூர் மற்றும் பல்லகச்சேரி கிராமங்கள்.

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1962

எல்.ஆனந்தன் (

இந்திய தேசிய காங்கிரசு

1967

எம்.ஆனந்தன்

திமுக

1971

தர்மலிங்கம்

திமுக

1977

சுந்தரம்

இந்திய தேசிய காங்கிரஸ்

1980

சுந்தரம்

இந்திய தேசிய காங்கிரஸ்

1984

சிவராஜ்

இந்திய தேசிய காங்கிரஸ்

1989

நடேசஉடையார்

திமுக

1991

கோவிந்தராஜு

அதிமுக

1996

சிவராஜ்

தமிழ் மாநில காங்கிரஸ்

2001

சிவராஜ்

தமிழ் மாநில காங்கிரஸ்

2006

சிவராஜ்

இந்திய தேசிய காங்கிரஸ்

2011

விஜயகாந்த்

தேமுதிக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S. சிவராஜ்

ஐ.என்.சி

54793

2

L. ஆதிநாராயணன்

அ.தி.மு.க

46858

3

T.K. கோவிந்தன்

தே.மு.தி.க

20283

4

M. கோவிந்தராஜ்

சுயேட்சை

2757

5

B. ராஜா சுந்தரம்

பி.ஜே.பி

1992

6

N. தர்மலிங்கம் மரூர்

எல்.ஜே.பி

1511

128194

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

விஜய்காந்த்

தே.மு.தி.க

91164

2

S. சிவராஜ்

காங்கிரஸ்

60369

3

M. விஜயாகாந்த்

சுயேச்சை

7355

4

P. நடராசன்

ஐ.ஜே.கே

3227

5

M. ராமஜெயம்

சுயேச்சை

2044

6

J. செல்வராஜு

எல்.எஸ்.பி

1860

7

B. ராஜாசுந்தரம்

பி.ஜே.பி

1793

8

K. செந்தில்

சுயேச்சை

1587

9

V. முருகன்

சுயேச்சை

1299

10

A. கண்ணன்

பி.எஸ்.பி

707

171405

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x