Published : 11 Mar 2021 02:05 PM
Last Updated : 11 Mar 2021 02:05 PM

49 - ஜோலார்பேட்டை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
மு.ஊ. வீரமணி அதிமுக
க. தேவராஜி திமுக
தென்னரசு சாம்ராஜ் அமமுக
ஆர்.கருணாநிதி மக்கள் நீதி மய்யம்
ஆ.சிவா நாம் தமிழர் கட்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொகுதியாக கருதப்படுவது ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதி. காரணம் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் சொந்த தொகுதி ஜோலார்பேட்டை. திருப்பத்தூர் தொகுதியுடன் இணைந்திருந்த ஜோலார்பேட்டை கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ஜோலார்பேட்டை புதிய தொகுதியாக உருவெடுத்தது. இத்தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக அமைச்சர் கே.சி.வீரமணி தேர்வு செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை தொகுதியில் கந்திலி ஒன்றியத்தில் ஒரு சில பகுதிகளும், நாட்றாம்பள்ளி ஒன்றியம், ஜோலார்பேட்டை ஒன்றியம், ஜோலார்பேட்டை நகராட்சி, நாட்றாம்பள்ளி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

அதேபோல, கலந்திரா, ஆத்தூர்குப்பம், பெரியகரம், தோக்கியம், பொன்னேரி, ஏலகிரி மலை, திரியாலம், அச்சமங்கலம், குடியானக்குப்பம், மண்டலவாடி, கேத்தாண்டப்பட்டி, நாட்றாம்பள்ளி, பச்சூர், சின்னவேப்பம்பட்டு, பெத்தகல்லுப்பள்ளி, கத்தாரி, தோப்புலகுண்டா, வேடப்பட்டு, மல்லப்பள்ளி, அக்ரஹாரம், தாமலேரிமுத்தூர், நாயணசெருவு, பையனப்பள்ளி, பாச்சல், கதிரிமங்கலம், புத்தகரம், வெலக்கல்நத்தம், நத்திபெண்டா உள்ளிட்ட பல்வேறு முக்கிய கிராமங்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.

தொகுதி பிரச்சினைகள்

கடந்த 2011-ம் ஆண்டு ஜோலார்பேட்டை புதிய தொகுதியாக அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்து வருகின்றனர். 2011 மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு வசதிகளையும், வளர்ச்சிப்பணிகளையும் செய்து தருவதாக வாக்குறுதியளித்த தொகுதியின் எம்எல்ஏவும்,அமைச்சருமான கே.சி.வீரமணி சொன்னபடி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தரவில்லை என்ற குற்றச்சாட்டை இன்று வரை முன் வைக்கின்றனர்.

குறிப்பாக ஜோலார்பேட்டை நகரம், கிழக்கும், மேற்குமாக பிரிந்துக்கிடக்கிறது. இதை இணைக்க மேம்பாலம் அமைக்கப்படும் என 2011-ம் ஆண்டு அளித்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. மேம்பாலப்பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகிறது. அதேபோல, தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பார்சம்பேட்டை மேம்பாலப்பணிகள் பெரும் இழுப்பறிக்கு பிறகு சமீபத்தில் திறக்கப்பட்டது.

இது தவிர, ஜோலார்பேட்டை நகரத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும், மாவட்ட தொழில் மையம் அமைக்க வேண்டும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ ஆகியவை கொண்டு வர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை கானல் நீர் போலவே உள்ளது.

மேலும், ஜோலார்பேட்டையில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும், ஏலகிரி மலையை சுற்றுலா தலமாக அறிவித்து அங்கு தாவிரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. படித்த இளைஞர்கள் அதிகம் பேர் வசிப்பதால் வேலை வாய்ப்பு உறுதி செய்ய நாட்றாம்பள்ளி பகுதியில் தொழிற்பேட்டை (சிப்காட்)அமைக்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.

இது தவிர, மின்வாரிய அலுவலகம், தீயணைப்பு நிலையம், அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதிகள், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம், மின்விளக்கு வசதி, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.

ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி ஒன்றியங்களில் விவசாய தொழில் பரவலமாக செய்யப்பட்டு வருவதால் விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதிகள், மும்முனை மின்சாரம், கால்நடை வளர்ப்பு, பயிர் கடன், விவசாய இடப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

2016 தேர்தல்

கடந்த 2016-ம் நடைபெற்ற தேர்தலின்போது அதிமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி 82,525 வாக்குகள்

பெற்று வெற்றிப்பெற்றார். திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணி 71,534 வாக்குகள் பெற்று 2-ம் இடத்திலும், பாமக வேட்பாளர் பொன்னுசாமி 17,516 வாக்குகள் பெற்று 3-ம் இடத்திலும், தேமுதிக வேட்பாளர் பையாஸ்பாஷா 3,509 வாக்குகள் பெற்று 4-ம் இடத்துக்கும், விஜயபாரத மக்கள் கட்சி வேட்பாளர் திருமலை 1,224 வாக்குள் பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார். 1,483 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,18,449

பெண்

1,20,010

மூன்றாம் பாலினத்தவர்

7

மொத்த வாக்காளர்கள்

2,38,466

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.சி.வீரமணி

அதிமுக

2

டி.கவிதா தண்டபாணி

தி.மு.க

3

ஏ.பையாஸ்பாஷா

தேமுதிக

4

ஜி.பொன்னுசாமி

பாமக

5

ஆர்.ஓவியம் ரஞ்சன்

பாஜக - இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கட்சி

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

49. ஜோலார்பேட்டை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கே. சி. வீரமணி

அ.தி.மு.க

86273

2

பொன்னுசாமி

பா.ம.க

63337

3

M. அண்ணாமலை

சுயேச்சை

1912

4

M.S. வீரமணி

சுயேச்சை

1442

5

M. காந்திபாபு

பிஎஸ்பி

956

6

G.M. பொன்னுசாமி

சுயேச்சை

889

7

K. பரமசிவம்

சுயேச்சை

864

8

T. கோவிந்தராஜ்

சுயேச்சை

506

9

G. சந்தோஷ்

சுயேச்சை

322

156501

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x