Published : 11 Mar 2021 01:58 PM
Last Updated : 11 Mar 2021 01:58 PM

138 - மணப்பாறை

மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சந்திரசேகர் அதிமுக
ப.அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி) திமுக
பி.கிருஷ்ணகோபால் அமமுக
உமாராணி மக்கள் நீதி மய்யம்
ப.கனிமொழி நாம் தமிழர் கட்சி

2006 தேர்தல் வரை மருங்காபுரி என்று இருந்த இத்தொகுதி மறுசீரமைப்பின்போது மணப்பாறை தொகுதியாக மாற்றப்பட்டது.

மணப்பாறை நகராட்சி, மருங்காபுரி ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சி, மற்றும் வையம்பட்டி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகள் இந்தத் தொகுதியில் வருகின்றன. பெரும்பாலும் கிராமப்புறங்களே இந்தத் தொகுதியில் வருகின்றன. பூ மற்றும் காய்கறி விவசாயமே அதிகம் நடைபெறுகிறது. மணப்பாறை முருக்கு மட்டுமின்றி வீரப்பூர் பெரியகாண்டியம்மன், பொன்னர், சங்கர் கோயில் மகதிருவிழாவும் பிரசித்திப் பெற்றது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

மணப்பாறை தாலுக்கா (பகுதி)

புதூர், வையமலைப்பாளையம், வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளவீரம்படி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி, கருமலை, அம்மாச்சத்திரம், எண்டப்புலி, கஞ்சநாயக்கன்பட்டி, வேலாக்குறிச்சி, வேங்கடநாயக்கன்பட்டி, மருங்காபுரி, டி.இடையப்பட்டி, யாகபுரம், நல்லூர், காரைப்பட்டி, செவல்பட்டி, இக்கரைகோசக்குறிச்சி, அக்கியம்படிட், அழகாபுரி, லெக்கநாயக்கன்பட்டி, தெத்தூர் மற்றும் செவந்தாம்பட்டி கிராமங்கள்,

பொன்னம்பட்டி (பேரூராட்சி), மணப்பாறை (நகராட்சி)

தொகுதி பிரச்சினைகள்

மணப்பாறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லை. இதன் காரணமாக இந்தப் பகுதி இளைஞர்கள் திண்டுக்கல், கரூர், திருச்சி நகரங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அதேபோல், கல்லூரிக் கல்வி பயில மாணவ- மாணவிகள் திருச்சிக்கே வர வேண்டிய நிலை உள்ளது.

மணப்பாறைவாசிகளின் பிரதான கோரிக்கைகளில், மணப்பாறையில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும், மணப்பாறை செவலூர் பிரிவு ரோடு நான்குவழிச் சாலை அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் ஆகியவையும் உண்டு.

1977 முதல் இந்தத் தொகுதியில் அதிமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2016 தேர்தலில் அதிமுகவின் ஆர்.சந்திரசேகர், சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் கே.பொன்னுசாமியை வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சுப.சோமு மூன்றாமிடம் பிடித்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,41,503

பெண்

1,47,475

மூன்றாம் பாலினத்தவர்

12

மொத்த வாக்காளர்கள்

2,88,990

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர். சந்திரசேகர்

அதிமுக

2

எம்.ஏ. முகம்மது நிசாம்

இ.யூனியன் முஸ்லீம் லீக்

3

பி. கிருஷ்ணகோபால்

தேமுதிக

4

ஏ. லீமா சிவக்குமார்

பாமக

5

சி. செந்தில் தீபக்

பாஜக

6

எம். அருணகிரி

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சந்திரசேகர்.R

அதிமுக

81020

2

பொன்னுசாமி.K

சுயேச்சை

52721

3

சுப்பா சோமு

காங்கிரஸ்

26629

4

வின்சென்ட் டி பால்

சுயேச்சை

3523

5

செந்தில் தீபக்.C

பாஜக

2589

6

சாமி ராசு.C

சுயேச்சை

2237

7

மார்டின் ஜெகதீசன்.A

சுயேச்சை

1126

8

பாவதிநாதன்.T

சுயேச்சை

828

9

உமாராணி.K

இந்திய ஜனநாயக கட்சி

769

10

கிருஷ்ணன்.P

சுயேச்சை

700

11

ஜேசுராஜ்.S

சுயேச்சை

605

12

கருப்பன்.S

சுயேச்சை

501

173248

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x