Published : 11 Mar 2021 02:02 PM
Last Updated : 11 Mar 2021 02:02 PM

139 - ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
கு.ப.கிருஷ்ணன் அதிமுக
எம்.பழனியாண்டி திமுக
சாருபாலா ஆர்.தொண்டைமான் அமமுக
பிரான்சிஸ் மேரி மக்கள் நீதி மய்யம்
க.செல்வரதி நாம் தமிழர் கட்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு, வெற்றி பெற்றதால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து உடைய தொகுதியாக மாறியது. பூலோக வைகுண்டம் என்றும், 108 வைணவ திவ்ய தேச தலங்களில் முதன்மையான தலமாகவும் விளங்குவது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இங்கு பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்த தொகுதியில் முத்துராஜா, கள்ளர், பட்டியல் இனத்தினர் மற்றும் உடையார் சமூகத்தினர் பெருமளவில் உள்ளனர். இவர்கள் தவிர பிராமணர்கள், நாயுடு, பிள்ளைமார், கோனார் ஆகிய சமூகத்தினர் கணிசமான அளவுக்கு உள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருச்சி மாநகராட்சியின் 6 வார்டுகள் மட்டுமே மாநகரப் பகுதியாகவும், மற்ற பகுதிகள் ஊரகப் பகுதிகளாகவே உள்ளன. இந்த தொகுதி ஸ்ரீரங்கம், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை உள்ளிட்ட ஒன்றியப் பகுதிகள் அடங்கியுள்ளன.

வார்டு எண். 1 முதல் 6 வரை.

திருவரங்கம் வட்டம் (பகுதி)

பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, குமாரவயலூர், முள்ளிக்கரும்பூர், கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), போதாவூர், புலியூர், அதவத்தூர் (மேற்கு), அதவத்தூர் (கிழக்கு), நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், கே.கள்ளிக்குடி (வடக்கு) கே.கள்ளிக்குடி (தெற்கு), தாயனூர், நாவலூர் கொட்டப்பட்டு, அரியாவூர்-உக்கடை அரியாவூர், பெரியநாயகி சத்திரம், அம்மாப்பேட்டை, கொளத்தூர், மாத்தூர், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், நாகமங்கலம், கொட்டப்பட்டு, மேக்குடி, முடிகண்டம், கொழுக்கட்டைக்குடி, தொரக்குடி,திருமலைசமுத்திரம், ஓலையூர், பழூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, மருதன்காகுறிச்சி, பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய் துறை, அந்தநல்லூர், கொடியாலம், குலுமணி, பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, மேக்குடி, அல்லூர் மற்றும் பேரூர் கிராமங்கள்,

சிறுகமணி (பேரூராட்சி),

மணப்பாறை வட்டம் (பகுதி)

தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி (வடக்கு), இடையப்பட்டி, செட்டிச்சத்திரம்,, சித்தாநத்தம், கே.பெரியப்பட்டி (தெற்கு), சமுத்திரம், சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி மற்றும் மாதம்பட்டி கிராமங்கள்.

இலுப்பூர் வட்டம் (பகுதி) புதுக்கோட்டை மாவட்டம் கோமங்கலம் கிராமம் கோமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கன மற்றும் பூகோள ரீதியாக 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் எல்லைப் பரப்பிற்குள் வருகிறது

முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா 4 ஆண்டுகள் இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்ததால் புதிய காகிதத் தொழிற்சாலை, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஒரே நேரத்தில் 1,000 பேர் தங்கக் கூடிய யாத்ரிக நிவாஸ் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் ரூ.3,000 கோடி அளவுக்கு இந்த தொகுதியில் நிறைவேற்றப்பட்டன. அதன்பின் 2015-ல் நடைபெற்ற இடைத்தேர்தல், 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி வெற்றி பெற்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் ஆனார்.

தொகுதி பிரச்சினைகள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மணிகண்டம், அந்தநல்லூர் பகுதியில் ஒருங்கிணைந்த பூ வணிக வளாகம் அமைக்க வேண்டும், பஞ்சப்பூர் - ஜீயபுரம் அரைவட்டச் சுற்றுச்சாலை பணிகளை முடிக்க வேண்டும், கரூர் பைபாஸ் சாலையில் அல்லூர் படித்துறை அருகிலிருந்து காவிரியின் எதிர்கரையில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு பாலம் அமைத்துத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்றும் நிலுவையில் உள்ளன.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,50,036

பெண்

1,60,676

மூன்றாம் பாலினத்தவர்

27

மொத்த வாக்காளர்கள்

3,10,739

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எஸ். வளர்மதி

அதிமுக

2

எம். பழனியாண்டி

திமுக

3

வி. புஷ்பம்

இந்திய கம்யூ.

4

எஸ். உமாமகேஸ்வரி

பாமக

5

ஏ. ராஜேஷ்குமார்

பாஜக

6

வி. ராஜமாணிக்கம்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி)

வார்டு எண். 1 முதல் 6 வரை.

திருவரங்கம் வட்டம் (பகுதி)

பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, குமாரவயலூர், முள்ளிக்கரும்பூர், கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), போதாவூர், புலியூர், அதவத்தூர் (மேற்கு), அதவத்தூர் (கிழக்கு), நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், கே.கள்ளிக்குடி (வடக்கு) கே.கள்ளிக்குடி (தெற்கு), தாயனூர், நாவலூர் கொட்டப்பட்டு, அரியாவூர்-உக்கடை அரியாவூர், பெரியநாயகி சத்திரம், அம்மாப்பேட்டை, கொளத்தூர், மாத்தூர், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், நாகமங்கலம், கொட்டப்பட்டு, மேக்குடி, முடிகண்டம், கொழுக்கட்டைக்குடி, தொரக்குடி,திருமலைசமுத்திரம், ஓலையூர், பழூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, மருதன்காகுறிச்சி, பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய் துறை, அந்தநல்லூர், கொடியாலம், குலுமணி, பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, மேக்குடி, அல்லூர் மற்றும் பேரூர் கிராமங்கள்,

சிறுகமணி (பேரூராட்சி),

மணப்பாறை வட்டம் (பகுதி)

தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி (வடக்கு), இடையப்பட்டி, செட்டிச்சத்திரம்,, சித்தாநத்தம், கே.பெரியப்பட்டி (தெற்கு), சமுத்திரம், சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி மற்றும் மாதம்பட்டி கிராமங்கள்.

இலுப்பூர் வட்டம் (பகுதி) புதுக்கோட்டை மாவட்டம் கோமங்கலம் கிராமம் கோமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கன மற்றும் பூகோள ரீதியாக 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் எல்லைப் பரப்பிற்குள் வருகிறது

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2015 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குள்

விழுக்கடு

1951

சிற்றம்பலம்

இந்திய பொதுவுடமைக் கட்சி

25343

52.6

1957

கே. வாசுதேவன்

காங்கிரஸ்

22756

48.92

1962

என். சுப்பிரமணியன் செட்டியார்

காங்கிரஸ்

39101

54.76

1967

எசு. இராமலிங்கம்

காங்கிரஸ்

34474

50.48

1971

ஜோதி வெங்கடாசலம்

ஸ்தாபன காங்கிரஸ்

36172

51.22

1977

ஆர். சவுந்தரராசன்

அதிமுக

26200

31.31

1980

ஆர். சவுந்தரராசன்

அதிமுக

49160

53.48

1984

ஆர். சவுந்தரராசன்

அதிமுக

58861

56.52

1989

ஒய். வெங்கடேசுவர தீட்சிதர்

ஜனதா கட்சி

42629

35

1991

ப. கிருசுணன்

அதிமுக

82462

70.51

1996

டி. பி. மாயவன்

திமுக

73371

55.74

2001

கே. கே. பாலசுப்பிரமணியன்

அதிமுக

72993

53.07

2006

எம். பரஞ்சோதி

அதிமுக

89135

---

2011

ஜெ. ஜெயலலிதா *

அதிமுக

1,05,328

---

இடைத் தேர்தல், 2015

எஸ். வளர்மதி

அதிமுக

1,51,561

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

சீனிவாசன்

காங்கிரஸ்

17364

36.04

1957

சிற்றம்பலம்

சுயேச்சை

6847

14.72

1962

டி. ஓரைசாமி

திமுக

24651

34.52

1967

எம். அருணா

திமுக

33356

48.84

1971

ஆர். காமாட்சியம்மாள்

திமுக

33239

47.07

1977

எம். தர்மலிங்கம்

திமுக

21135

25.26

1980

வி. சுவாமிநாதன்

காங்கிரஸ்

42761

46.52

1984

சி. இராமசாமி உடையார்

ஜனதா கட்சி

38399

36.87

1989

கு. ப. கிருசுணன்

அதிமுக (ஜெ)

34621

28.43

1991

ஆர். செயபாலன்

ஜனதா தளம்

30918

26.44

1996

எம். பரஞ்சோதி

அதிமுக

43512

33.06

2001

எம். சவுந்திரபாண்டியன்

பாஜக

60317

43.86

2006

ஜி. ஜெரோம் ஆரோக்கியராசு

காங்கிரஸ்

78213

---

2011

என். ஆனந்த்

திமுக

63840

---

இடைத் தேர்தல், 2015

என். ஆனந்த்

திமுக

55045

---

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பரஞ்சோதி.M

அதிமுக

89135

2

ஜெரோம் ஆரோக்கியராஜ்.G

காங்கிரஸ்

78213

3

ரமேஷ்.A

தேமுதிக

16522

4

பார்த்திபன்.P

பாஜக

4878

5

மெய்யநாதன்.K

சுயேச்சை

1503

6

ரவிசங்கர் ஜயர்.N

ஹிந்து மகாசபா

554

7

தலித் இளையமாரன் (அ) பழனிவேல்

சுயேச்சை

522

8

பெரியசாமி.A

பி எஸ் பி

505

9

முனியப்பன்.K

சுயேச்சை

380

10

ரவி.P

சுயேச்சை

330

11

மகாலட்சுமி.M

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு

319

12

வேலுசாமி.S

சமாஜ்வாதி கட்சி

318

13

மரியா ரூஸ்வெல்.T.M

சுயேச்சை

241

14

சின்னதுரை.M.P

சுயேச்சை

225

15

தங்கவேல்.S

சுயேச்சை

196

193841

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ஜெ.ஜெயலலிதா

அதிமுக

105328

2

ஆனந்த்.N

திமுக

63480

3

அறிவழகன்.K.A.S

பாஜக

2017

4

தமிழரசி.V

இந்திய ஜனநாயக கட்சி

1221

5

நடராஜன்.S

பி எஸ் பி

928

6

ரவிசங்கர் ஜயர்.N

ஹிந்து மகாசபா

738

7

ரவி.P

சுயேச்சை

684

8

சோழன்.K

சுயேச்சை

566

9

ரெங்கராஜ்.P

சுயேச்சை

461

10

ரமேஷ்.M

சுயேச்சை

436

11

சேது.S

சுயேச்சை

364

12

சண்முகம்.R.R

சுயேச்சை

359

13

ஸ்ரீ ராமசந்திரன்

சுயேச்சை

271

14

செல்வம்.M

சுயேச்சை

236

15

வெற்றிசெல்வம்

சுயேச்சை

225

16

முதியன்.C

சுயேச்சை

212

17

கல்யாணசுந்தரம்.K.A

சுயேச்சை

174

18

ராதா

சுயேச்சை

166

19

கோவிந்தராஜன்.J

சுயேச்சை

161

20

ராம ராஜேந்திரன்

சுயேச்சை

156

21

காமராஜ்.K

சுயேச்சை

128

22

அய்யாவு.S

சுயேச்சை

128

23

ஜெயராமன்.V

சுயேச்சை

108

178547

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x