Published : 11 Mar 2021 02:24 PM
Last Updated : 11 Mar 2021 02:24 PM

217 - ஓட்டப்பிடாரம் (தனி)

கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் கம்பீர வெண்கல சிலை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
மோகன் அதிமுக
எம்.சி.சண்முகய்யா திமுக
எஸ்.ஆறுமுக நயினார் அமமுக
சி.அருணாதேவி மக்கள் நீதி மய்யம்
வைகுண்டமாரி நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித் தொகுதி ஒட்டப்பிடாரமாகும். வ.உ.சி. சிதம்பரனார், வீரபாண்டிய கட்டப்பொம்மன், வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கனார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளை நாட்டுக்கு தந்த பூமி. ஆனால், மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய தொகுதிகளில் ஒன்று.

ஒட்டப்பிடாரம் வட்டம் முழுவதும், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் ஒருசில பகுதிகளை உள்ளடக்கியது ஒட்டப்பிடாரம் தொகுதி. தூத்துக்குடி மாநகராட்சியில் சில பகுதிகள் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வருகின்றன. முதலில் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்குள் ஒட்டப்பிடாரம் இருந்தது. பின்னர் மறுசீரமைப்பில் மாற்றியமைக்கப்பட்டு தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரதான தொழில் விவசாயம். வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற மானாவாரி விவசாயத்தை நம்பி தான் விவசாயிகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சில தொழிற்சாலைகள் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அமைந்து வருகின்றன. குறிப்பாக சில தனியார் அனல்மின் நிலையங்கள் இந்த தொகுதியில் உள்ளன.ஆயத்த ஆடை தொழிலில் பிரசித்தி பெற்ற குட்டி திருப்பூர் என்றழைக்கப்படும் புதியம்புத்தூர் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தான் அமைந்துள்ளது.

தொகுதியின் பிரச்சினைகள்

இந்த தொகுதியில் பிரச்சினைகள் ஏராளம். மானாவாரி விவசாயத்தை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளை அதிகம் அமைக்க வேண்டும். புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்க வேண்டும். மலைப்பட்டியில் உள்ள கொம்பாடி ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும். தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை ஒட்டப்பிடாரம் பகுதிக்கு திருப்பி விட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர் இத்தொகுதி மக்கள்.

இந்த தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 13 பொது தேர்தல்கள், ஒரு இடைத்தேர்தல் என மொத்தம் 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 4 முறையும் அதிகபட்சமாக வென்றுள்ளன. திமுக 2 முறை வென்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி, புதிய தமிழகம், சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த 2011 தேர்தலில் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்ட டாக்டர் க. கிருஷ்ணசாமி 25,126 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.சுந்தர்ராஜன் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக பிரிந்த போது, அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த ஆர்.சுந்தர்ராஜன் அமமுகவுக்கு சென்றார். இதனால் மாவட்டத்தில் இடைத் தேர்தலை சந்தித்த 2 தொகுதிகளில் ஒட்டப்பிடாரமும் ஒன்று.

2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சி.சண்முகையா 19,657 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,08,897

பெண்

1,10,930

மூன்றாம் பாலினத்தவர்

15

மொத்த வாக்காளர்கள்

2,19,842

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

க. கிருஷ்ணசாமி

புதிய தமிழகம்

2006

P.மோகன்

அதிமுக

39.34

2001

A.சிவபெருமாள்

அதிமுக

43.3

1996

க. கிருஷ்ணசாமி

புதிய தமிழகம்

27.32

1991

S.X.ராஜமன்னார்

அதிமுக

66.28

1989

M.முத்தய்யா

திமுக

31.69

1984

R.S.ஆறுமுகம்

இ.தே.கா

67.89

1980

M.அப்பாதுரை

இந்திய கம்யூனிச கட்சி

52.11

1977

O.S.வேலுச்சாமி

இ.தே.கா

41.51

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. மோகன்

அ.தி.மு.க

38715

2

K. கிருஷ்ணசாமி

பி.எஸ்.பி

29271

3

S.X. ராஜமன்னார்

தி.மு.க

23356

4

K. மோகன்ராஜ்

தே.மு.தி.க

2690

5

V. கோதண்டராமன்

எ.ஐ.எப்.பி

1448

6

முத்துராஜ்

சுயேச்சை

978

7

A. சந்தானகுமார்

பி.ஜே.பி

963

8

மாடசாமி

சுயேச்சை

370

9

T. செந்தூர்பாண்டி

சுயேச்சை

256

10

R. சுரேஷ்குமார்

சுயேச்சை

185

11

பெருமாள்

சுயேச்சை

172

98404

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. கிருஷ்ணசாமி

பி.டி

71330

2

S. ராஜா

தி.மு.க

46204

3

A. முத்துபழவேசம்

பி.ஜே.பி

2614

4

M.A. தர்மர்

சுயேச்சை

1659

5

G. ராஜ்குமார்

சுயேச்சை

970

6

C. சங்கர்

சுயேச்சை

949

7

C. பரமசிவன்

சுயேச்சை

900

8

D. சந்திரா

பி.எஸ்.பி

785

9

R.S. பாலசுப்பிரமணி

சுயேச்சை

703

10

G. மாடசாமி

சுயேச்சை

339

126453

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x