Published : 11 Mar 2021 02:29 PM
Last Updated : 11 Mar 2021 02:29 PM

198 - ஆண்டிபட்டி

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வைகை அணை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
லோகிராஜன் அதிமுக
எ.மகராஜன் திமுக
ஜெயக்குமார் அமமுக
எஸ். குணசேகரன் மக்கள் நீதி மய்யம்
அ.செயக்குமார் நாம் தமிழர் கட்சி

இது ஒரு பொதுத்தொகுதி ஆகும். மூலவைகையின் பிறப்பிடம் இத்தொகுதியின் வருசநாடு பகுதியில் அமைந்துள்ளது. நடிகர்கள் எஸ்எஸ்.ராஜேந்திரன், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் இங்கு களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இத்தொகுதி பல ஆண்டுகளுக்கு முன்பே மாநில அளவிலான கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதியில் விவசாயமும், நெசவும் பிரதான தொழிலாக உள்ளது. சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் இப்பகுதியில் நெய்யப்படும் சேலைகள் பிரசித்தி பெற்றவை. தமிழக அரசின் இலவச சேலை திட்டத்திற்காகவும் நெய்யப்படுகிறது.

ஆண்டிபட்டி, வருசநாடு பகுதிகளில் முருங்கை, வெண்டை, கொட்டைமுந்திரி, இலவம் பஞ்சு சாகுபடியும், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் திராட்சை, திசுவாழை, நெல் சாகுபடியும் நடந்து வருகிறது.

கண்டமனூர் விலக்கில் அரசு மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனையும், அண்ணா கூட்டுறவு நூற்பாலையும் செயல்பட்டு வருகிறது. மேகமலை, ஹைவேவிஸ், மேல் மணலாறு, கீழ் மணலாறு, மகாராஜாமெட்டு ஆகிய மலை கிராமங்களில் தேயிலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஹைவேவிஸ்மலை சிறந்த சுற்றுலாத்தளமாக உள்ளது.

கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் முல்லைபெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் நீர் மின்உற்பத்தி நடைபெறுகிறது-. இங்குதான் முல்லை பெரியாறு அணையை கட்டிய ஆங்கில பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபமும் உள்ளது.

ஆண்டிபட்டி, கடமலை மயிலை என ஊராட்சி ஒன்றியங்களும், கூடலூர் நகராட்சி, ஆண்டிபட்டி, காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ் என பேரூராட்சிகள் உள்ளது. முக்குலத்தோர் சுமார் 31 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் சுமார் 19சதவீதமும், கவுண்டர் சுமார் 15சதவீதமும், நாயுடு சுமார் 11 சதவீதமும், சாலியர் உள்பட பிற சமூகத்தினர் 24 சதவீதமும் வசித்து வருகின்றனர். வைகை உயர்தொழில்நுட்ப பூங்கா திட்டம், வருசநாடு-விருதுநகரை இணைக்கும் புதிய சாலை திட்டம், திப்பரவு அணை திட்டம், மூலவைகை ஆற்றில் குறுக்கே அணை ஆகிய திட்டங்கள் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.

கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 15 தேர்தல்களில் காங்கிரஸ் ஒருமுறை, சுதந்திரா கட்சி இருமுறை, திமுக 3, அதிமுக 9 தடவை என வெற்றி பெற்றுள்ளது. 2006-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 2011 மற்றும் 2016-ம் ஆண்டில் தங்க தமிழ்ச்செல்வன்(அதிமுக) வெற்றி பெற்றார். 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் எ.மகாராஜன் வெற்றி பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ஆண்டிபட்டி தாலுகா, உத்தமபாளையம் தாலுகா (பகுதி)கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி மற்றும் வண்ணாத்திப்பாறை (ஆர்.எப்) வருவாய்க் கிராமங்கள்,காமயக்கவுண்டன்பட்டி (பேரூராட்சி), கூடலூர் (நகராட்சி) மற்றும் ஹைவேவிஸ் (பேரூராட்சி).

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,26,436

பெண்

1,27,308

மூன்றாம் பாலினத்தவர்

19

மொத்த வாக்காளர்கள்

2,53,763

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

டி.தங்கதமிழ்செல்வன்

அதிமுக

2

எல்.மூக்கையா

திமுக

3

எம்.என்.கிருஷ்ணமூர்த்தி

தேமுதிக

4

கே.ரவி

பாமக

5

எஸ்.ஆர்.சக்கரவர்த்தி

பாஜக

6

எம்.தம்பி ஆனந்த் என்ற எம்.ஆனந்தபாபு

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

தங்க. தமிழ்ச்செல்வன்

அதிமுக

2006

ஜெ. ஜெயலலிதா

அதிமுக

55.04

2002

ஜெ. ஜெயலலிதா

அதிமுக

58.21

2001

தங்க. தமிழ்ச்செல்வன்

அதிமுக

53.78

1996

பி. ஆசையன்

திமுக

44.9

1991

கே. தவசி

அதிமுக

64.25

1989

பி. ஆசையன்

திமுக

29.5

1984

எம். ஜி. இராமச்சந்திரன்

அதிமுக

67.4

1980

எஸ். எஸ். ராஜேந்திரன்

அதிமுக

59.79

1977

கே. கந்தசாமி

அதிமுக

34.41

1971

என்.வி.குருசாமி

சுதந்திராக் கட்சி

1967

எஸ்.பரமசிவம்

சுதந்திராக் கட்சி

1962

அ.கிருஷ்ணவேணி

இந்திய தேசிய காங்கிரஸ்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

J. ஜெயலலிதா

அ.தி.மு.க

73927

2

சீமான்

தி.மு.க

48741

3

V.S. சந்திரன்

தி.மு.தி.க

6795

4

M. சாந்தகுமார்

ப.ஜ.க

1298

5

P. பாலசுந்தர்ராஜன்

பகுஜன்

1154

6

K. முருகவேல் ராஜன்

ஜனதா

389

7

S. ராஜா மணி

சுயேச்சை

363

8

R. ஜெயராமன்

சுயேச்சை

363

9

P. ராஜா

சுயேச்சை

299

10

S. ரமேஷ்

சுயேச்சை

282

11

G. பெரியசாமி

சுயேச்சை

197

12

K.S. பாஸ்காரன்

சுயேச்சை

112

13

M.பிச்சைமணி

சுயேச்சை

108

14

S. சக்திவேல்

சுயேச்சை

101

15

R. சுப்புராஜ்

சுயேச்சை

90

16

A.பரமேஸ்வரன்

சுயேச்சை

85

134304

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

தங்கதமிழ்செல்வன்

அ.தி.மு.க

91721

2

L. மூக்கையா

தி.மு.க

70690

3

R. குமார்

ப.ஜ.க

1660

4

R. ராஜபாண்டி

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

1015

5

S. பிச்சைமணி

சுயேச்சை

961

6

U. மஹாலிங்கம்

சுயேச்சை

700

7

S. ஈஸ்வரன்

பகுஜன்

620

8

M. முத்துப்பாண்டி

சுயேச்சை

592

9

R. பாலக்கிருஷ்ணன்

சுயேச்சை

517

10

K. தங்கமுத்து

சுயேச்சை

322

11

M. செல்வக்குமார்

சுயேச்சை

228

12

R. முருகானந்தம்

இந்திய ஜனநாயககட்சி

224

13

C. சேரலாதன்

சுயேச்சை

203

14

S.M. ராமர்

சுயேச்சை

198

15

S.S. குருசாமி

சுயேச்சை

172

16

K. பால்பாண்டி

சுயேச்சை

171

17

R. முருகன்

சுயேச்சை

153

18

V. அருண்குமார்

சுயேச்சை

113

19

M.S. காலுசிவலிங்கம்

சுயேச்சை

107

20

R. ஈஸ்வரன்

சுயேச்சை

102

21

R. கருணாநிதி

சுயேச்சை

97

22

S. அந்தோனிராஜ்

சுயேச்சை

86

170652

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x