Published : 11 Mar 2021 02:43 PM
Last Updated : 11 Mar 2021 02:43 PM

196 - திருமங்கலம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
உதயகுமார் அதிமுக
மு.மணிமாறன் திமுக
கே.ஆதிநாராயணன் அமமுக
ராம்குமார் மக்கள் நீதி மய்யம்
மை.சாராள் நாம் தமிழர் கட்சி

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் முக்கிய தொகுதியாக திகழ்கிறது திருமங்கலம். தொகுதி. மறுசீரமைப்பில் சேடபட்டி தொகுதி கலைக்கப்பட்டு அதிலிருந்த சில பகுதிகள் திருமங்கலத்துடன் இணைக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தை சேர்ந்த இத்தொகுதி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் கீழ் உள்ளது. இந்த தொகுதி முழுவதும் விவசாயத்தையே முக்கியமான தொழிலாக கொண்டுள்ளது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். விமான நிலைய சாலையில் ரயில்வே மேம்பாலம், திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம், சிவரக்கோட்டையில் தொழிற்பேட்டை அமைக்கப்படாதது, பெரிய தொழிற்சாலைகள் இல்லாதது இந்த தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனையாக உள்ளது. திருமங்கலம் தாலுகாவை பிரித்து புதிதாக கள்ளிக்குடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. திருமங்கலம் புதிய கோட்டமாக உயர்த்தப்பட்டது.

திருமங்கலம், தே.கல்லுப்பட்டி பகுதிகளில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்படும். திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றியம், கள்ளிக்குடி ஒன்றியம், தே.கல்லுப்பட்டி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, பேரையூர் பேரூராட்சி ஆகிய பகுதிகள் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரி, அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும், அரசு ஆசிரியர் பயிற்சி நிலையம் மற்றும் சில தனியார் கல்லூரிகள், கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்த விஷயம் பரபரப்பானது. இதன் பின்னர் நடந்த தேர்தல்களின்போது ”திருமங்கலம் பார்முலா” என்ற பெயர் தேர்தல் பிரபலமாகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்துடன் திகழ்கிறது.

1952-ம் ஆண்டு முதல் 15 சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் ஒரு இடைத்தேர்தல் என 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 5 முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், ஒருமுறை பார்வர்டு பிளாக் கட்சியும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், ம.தி.மு.க. ஒருமுறையும், சுயேட்சை ஒருமுறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். 2006 சட்டமன்ற தேர்தலில் வீர.இளவரசன்(ம.தி.மு.க.), 2009 இடைத்தேர்தலில் லதா அதியமான்(தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர். கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ம.முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

திருமங்கலம் தாலுக்கா, கள்ளிக்குடி தாலுக்கா

பேரையூர் தாலுகா (பகுதி)

பூசலபுரம், சின்ன பூலாம்பட்டி, முத்துநாகையாபுரம் மிமி பிட், முத்துநாகையாபுரம் மி பிட், மத்தக்கரை, சின்ன ரெட்டிபட்டி, ஈஸ்வரபேரி, கவுண்டன்பட்டி, அப்பக்கரை, குன்னத்தூர், கெஞ்சம்பட்டி, ஆதனூர், லட்சுமிபுரம், வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், கிளாங்குளம், சாலிச்சந்தை, பேரையூர், சிலமலைப்பட்டி, எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், கூவலப்புரம், மோடகம், காடனேரி, வைரவி அம்மாபட்டி, காரைக்கேனி, வேளாம்பூர், வையூர், நல்லமரம், சிலார்பட்டி, கோபாலபுரம், ஜாரி உசிலம்பட்டி, சிட்டுலொட்டு, பாரைப்பட்டி, முருகனேரி மற்றும் செங்குளம் கிராமங்கள்,

பேரையூர் (பேரூராட்சி) மற்றும் டி.கல்லுப்பட்டி (பேரூராட்சி)

2016 தேர்தல் வெற்றி விபரம்:

1. ஆர்.பி.உதயகுமார்-அதிமுக-95864(46.99%)

2. ஆர்.ஜெயராமன்-காங்கிரஸ்-72274(35.43%)

3. ஸ்ரீனிவாசன்-தேமுதிக-20589(13.94%)

4. ராமமூர்த்தி(பாஜக)-3261-(1.6%)

5.மணிகண்டன்(நாம்தமிழர்)-1999(0.98%)

வெற்றி வாக்கு வித்தியாசம்- 23,590

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,26,584

பெண்

1,32,212

மூன்றாம் பாலினத்தவர்

4

மொத்த வாக்காளர்கள்

2,58,800

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

ம. முத்துராமலிங்கம்

அ.தி.மு.க.

55.55

2009 இடை‌த்தே‌ர்த‌ல்

லதா அதியமான்

தி.மு.க.

60.15

2006

வீர. இளவரசன்

ம.தி.மு.க.

37.48

2001

கா.காளிமுத்து

அ.தி.மு.க.

52.67

1996

ம. முத்துராமலிங்கம்

தி.மு.க.

53.41

1991

T.K.இராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க.

64.87

1989

R.சாமிநாதன்

தி.மு.க.

34.84

1984

என். எஸ். வி. சித்தன்

இ.தே.கா.

55.23

1980

என். எஸ். வி. சித்தன்

இ.தே.கா.

46.43

1977

P.T.சரசுவதி

அ.தி.மு.க.

44.3

1971

ரத்தினசாமிதேவர்

பார்வார்டு பிளாக்கு

1967

என். எஸ். வி. சித்தன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1962

திருவேங்கட ரெட்டியார்

இந்திய தேசிய காங்கிரஸ்

1957

பெரியவல குருவரெட்டி

சுயேட்சை

1952

ராசாராம்

இந்திய தேசிய காங்கிரஸ்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

இளவரசன்.வீரா

மதிமுக

45067

2

வேலுசாமி.V

திமுக

40923

3

தனபாண்டியன்.T

தேமுதிக

19970

4

ஒச்ச தேவர்.T

பாஜக

7790

5

சுந்தரராஜ்.C

சுயேச்சை

1593

6

வேலுசாமி.A

சுயேச்சை

1193

7

குருசாமி.P

ஐக்கிய ஜனதா தளம்

1118

8

ராஜ்.M

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்

899

9

ராமையா.G

பகுஜன் சமாஜ் கட்சி

866

10

முத்துவேல்.K

சுயேச்சை

419

11

தவமணி.S

சுயேச்சை

210

12

அழகர்சாமி.P

சுயேச்சை

200

120248

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

முத்துராமலிங்கம்.M

அதிமுக

101494

2

மணிமாறன்.M

திமுக

75127

3

ஜெயபாண்டி.P

சுயேச்சை

1469

4

வையாதுறை.V

பகுஜன் சமாஜ் கட்சி

1389

5

ரமேஷ்பாபு.M

சுயேச்சை

787

6

முத்து.P

சுயேச்சை

677

7

முத்துமணி.M

இந்திய ஜனநாயக கட்சி

450

8

பெரியசாமி.K

லோக் ஜன சக்தி

243

9

பன்னீர்செல்வம்.A

சுயேச்சை

238

10

ஆறுமுகம்.G

சுயேச்சை

204

11

நாகரத்தினம்.R

சுயேச்சை

177

12

செல்வராஜ்.M

சுயேச்சை

176

13

கருந்தன்மலை.P

சுயேச்சை

159

14

குருசாமி

சுயேச்சை

113

182703

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x