Published : 11 Mar 2021 01:01 PM
Last Updated : 11 Mar 2021 01:01 PM

135 - கரூர்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
விஜயபாஸ்கர் அதிமுக
செந்தில்பாலாஜி திமுக
கஸ்தூரி தங்கராஜ் அமமுக
மோகன்ராஜ் மக்கள் நீதி மய்யம்
அர.கருப்பையா நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் முதல் பொதுத்தேர்தலான 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதி கரூர். இத் தொகுதியில கரூர் நகராட்சியின் 44 வார்டுகள், கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த சில ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கரூர் தொகுதியில் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் விபரப்படி, 1 லட்சத்து 15 ஆயிரத்து 834 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 321 பெண் வாக்காளர்கள், 19 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 174 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில், கரூருக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கோடிக்கு மேல் அந்நிய செலவாணி ஈட்டி தரும் 500க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள். ஆண்டுக்கு தலா ரூ.500 கோடி வருவாய் ஈட்டி தரும் கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்கள், 1,000த்திற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் உள்ளன.

புகழ்பெற்ற கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், கரூர் மாரியம்மன், தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி, வெண்ணெய்மலை பாலசுப்பிரமணி சுவாமி உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன. கரூர் தொகுதியில் கொங்கு வெள்ளாள கவுண்டர், முதலியார், முத்தரையர் சோழிய வெள்ளாளர், ரெட்டியார், பட்டியலின சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கரூர் தாலுகா (பகுதி)

நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், குப்பிச்சிபாளையம், வாங்கல், நெரூர் வடக்கு, நெரூர் தெற்கு, அச்சமாபுரம், சோழூர், பஞ்சமாதேவி, மின்னாம்பிள்ளி, மண்மங்கலம், ஆத்தூர், ஆண்டாங்கோவில் (மேற்கு), காடப்பாறை, திருமாநிலையூர் மற்றும் ஆண்டாங்கோயில் (கிழக்கு) கிராமங்கள்,

இனாம் கரூர் (நகராட்சி), கரூர் (நகராட்சி) மற்றும் தாந்தோணி (நகராட்சி).

தொகுதி கோரிக்கைகள்

இத்தொகுதியில் செயல்பட்ட 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் நீதிமன்ற உத்தரவால் கடந்த 2011ம் ஆண்டு மூடப்பட்ட நிலையில் சாயப்பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்படவி ல்லை. சாயப்பட்டறைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஸீரோ டிஸ்சார்ஜ் முறையில் செயல்படும் 70க்கும் குறைவான சாயப்பட்டறைகளே தற்போது செயல்படுகின்றன.

இதனால் பலர் சாயமிடும் பணிகளுக்காக வெளியூர் செல்வதால் பணம், காலவிரயம் ஏற்படுகிறது. எனவே கரூரில் சாயப்பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. கரூரில் புதிய நவீன பேருந்து நிலையம், சுற்றுச்சாலை, கரூர் நகராட்சியின் தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய விடுப்பட்ட பகுதிளில் பாதாள சாக்கடை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

தேர்தல் வரலாறு

கரூர் தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் (முன்னாள் போக்கு வரத்துத்துறை அமைச்சர்) வி.செந்தில்பாலாஜி 99 ஆயிரத்து 738 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று போக்குவரத்துத்துறை அமைச்சரானார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட (தற்போதைய கரூர் எம்.பி.) செ.ஜோதிமணி 55 ஆயிரத்து 593 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

2016 தேர்தலில் தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 81 ஆயிரத்து 936 வாக்குகள் பெற்று 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போக்குவரத்துத்துறை அமைச்சரானார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பேங்க் சுப்பிரமணியன் 81 ஆயிரத்து 595 வாக்குகள் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,15,834

பெண்

1,28,321

மூன்றாம் பாலினத்தவர்

19

மொத்த வாக்காளர்கள்

2,44,174.

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதிமுக

2

பேங்க் கே.சுப்பிரமணியன்

காங்கிரஸ்

3

ஏ.ரவி

தேமுதிக

4

எம்.முருகேசன்

பாமக

5

கே.சிவசாமி

பாஜக

6

செல்வ.நன்மாறன்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1952

T. V. சன்னாசி மற்றும் M. மாணிக்கசுந்தரம்

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் சுயேச்சை

29429 மற்றும் 21113

1957

T. M. நல்லசாமி

இந்திய தேசிய காங்கிரஸ்

31611

1962

T. M. நல்லசாமி

இந்திய தேசிய காங்கிரஸ்

35969

1967

T. M. நல்லசாமி

இந்திய தேசிய காங்கிரஸ்

33552

1971

நல்லசாமி

திமுக

45977

1977

K. வடிவேல்

அதிமுக

33856

1980

M. சின்னசாமி

அதிமுக

54331

1984

K. வடிவேல்

அதிமுக

65363

1989

K. V. ராமசாமி

திமுக

54163

1991

M. சின்னசாமி

அதிமுக

89351

1996

வாசுகி முருகேசன்

திமுக

79302

2001

T. N. சிவசுப்பிரமணியன்

இந்திய தேசிய காங்கிரஸ்

82012

2006

V. செந்தில் பாலாஜி

அதிமுக

80214

2011

V. செந்தில் பாலாஜி

அதிமுக

99738

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1952

தகவல் இல்லை

தகவல் இல்லை

தகவல் இல்லை

1957

K. S. ராமசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி

10576

1962

K. S. ராமசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி

20160

1967

S. நல்லசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

28677

1971

T. M. நல்லசாமி

ஸ்தாபன காங்கிரஸ்

35230

1977

S. நல்லசாமி

திமுக

22264

1980

S. நல்லசாமி

திமுக

46025

1984

K. V. ராமசாமி

திமுக

53160

1989

M. சின்னசாமி

அதிமுக(ஜெயலலிதா அணி)

49661

1991

வாசுகி முருகேசன்

திமுக

45259

1996

M. சின்னசாமி

அதிமுக

47294

2001

வாசுகி முருகேசன்

திமுக

58574

2006

வாசுகி முருகேசன்

திமுக

74830

2011

ஜோதிமணி

இந்திய தேசிய காங்கிரஸ்

55593

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

V.செந்தில் பாலாஜி

அ.தி.மு.க

80214

2

வாசுகி முருகேசன்

தி.மு.க

74830

3

A. ரவி

தே.மு.தி.க

9734

4

P.K. மோகன்

பி.ஜே.பி

1789

5

M. வெங்கடராமன்

சுயேச்சை

1396

6

A.S. ஜெகநாதன்

பிஎஸ்பி

763

7

முருகேசன் ராமா

சுயேச்சை

511

8

K. கனகராஜ்

எஸ்.பி

354

9

M. முருகேசன்

சுயேச்சை

349

10

K. பாஸ்காரன்

சுயேச்சை

248

11

K.P. பாலுசாமி

சுயேச்சை

120

12

R. செல்வராஜ்

சுயேச்சை

113

13

R. பாண்டியன்

சுயேச்சை

105

14

A.K. சக்திவேல்

சுயேச்சை

76

15

R. செந்தில்குமார்

சுயேச்சை

74

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

V. செந்தில்பாலாஜி

அ.தி.மு.க

99738

2

S. ஜோதிமணி

காங்கிரஸ்

55593

3

S. சிவமணி

பி.ஜே.பி

2417

4

B. அசோக்குமார்

பிபிஐஸ்

681

5

P. ஆதிகிருஷ்ணன்

பிஎஸ்பி

620

6

M. லோகநாதன்

சுயேச்சை

610

7

P. செந்தில்குமார்

சுயேச்சை

522

8

T. வீரமணி

சுயேச்சை

480

9

T. வேணுகோபால்

சுயேச்சை

433

10

C. பிரேம்குமார்

சுயேச்சை

393

11

K.M. பெரியசாமி

ஐஜேகே

371

12

M. பச்சையப்பன்

சுயேச்சை

223

13

R. மணிவேல்

சுயேச்சை

156

14

B.வசந்தராஜ்

சுயேச்சை

138

15

S. செல்வராஜ்

சுயேச்சை

129

16

K.S. சண்முகம்

சுயேச்சை

129

17

M. ரத்தினம்

சுயேச்சை

125

18

J. விஜய்

சுயேச்சை

97

19

M. சீனிவாசன்

சுயேச்சை

95

20

N. சீனிவாசன்

சுயேச்சை

81

163031

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x