Published : 11 Mar 2021 12:56 PM
Last Updated : 11 Mar 2021 12:56 PM

230 - நாகர்கோவில்

நாகர்கோவில் நகரின் மையத்தில் உள்ள மணிகூண்டு.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
எம்.ஆர்.காந்தி (பாஜக) அதிமுக
என்.சுரேஷ் ராஜன் திமுக
ஐ.அம்மு ஆண்ட்டோ அமமுக
மரியா ஜேக்கப் ஸ்டான்லி மக்கள் நீதி மய்யம்
த.ரா.விஜயராகவன் நாம் தமிழர் கட்சி

படித்தவர்கள் அதிகம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் என்ற பெருமையைக் கொண்டது திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சேதுலட்சுமி பாய் அரசு மேல்நிலைப் பள்ளி, நீதிமன்றம் உள்ளிட்ட ஏராளமான புராதான சிறப்புமிக்க வரலாற்று ஆவணங்களை தன்னகத்தே கொண்டபெருமையுடைய தொகுதி இது.

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடைதொகுதியின் பெருமை சொல்லும் அடையாள சின்னங்களில் ஒன்று. கடந்த 1977ம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுகமூன்று முறையும், எம்.ஜி.ஆர் அதிமுக ஒரு முறையும், திமுக 3முறையும், காங்கிரஸ் கட்சி இரு முறையும், த.மா.க ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

படித்தவர்கள் அதிகம் இருந்தும் தொகுதிக்குள் வேலைவாய்ப்புக்கான தொழிற் கூடங்கள் இல்லை. இங்கு 2013ம் ஆண்டிலே தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை நிறைவு பெறாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.முக்கடல் நீர் நாகர்கோவிலுக்கு கை கொடுத்தாலும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதற்கு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் இருந்து புத்தன்அணை திட்டம் மூலம் கொண்டு வரவுள்ள குடிநீர் திட்டம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொகுதிக்குள் இந்து நாடார், கிறிஸ்தவ நாடார், ஆசாரி, இஸ்லாமியர்கள், வெள்ளாளர், சாலியர்கள், மற்றும் பட்டியலினத்தவர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கலந்து உள்ளனர்.

கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ்ராஜன் 67, 369 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரிடம் தோல்வியைத் தழுவிய பாஜகவின் காந்தி 46, 413 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,30,088

பெண்

1,33,346

மூன்றாம் பாலினத்தவர்

15

மொத்த வாக்காளர்கள்

2,63,449

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

A.நாஞ்சில் முருகேசன்

அதிமுக

2006

A.ராஜன்

திமுக

38.01

2001

ஆஸ்டின்

அதிமுக

44.11

1996

M. மோசஸ்

த.மா.கா

48.4

1991

M. மோசஸ்

இ.தே.கா

56.81

1989

M. மோசஸ்

இ.தே.கா

34.48

1984

S. ரெத்தினராஜ்

திமுக

47.86

1980

M. வின்சென்ட்

அதிமுக

54.76

1977

M. வின்சென்ட்

அதிமுக

54.76

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

A. ராஜன்

தி.மு.க

45354

2

S. ஆஸ்டின்

ஐ.வி.பி

31609

3

S. ரெத்தினராஜ்

மதிமுக

21990

4

T.உதயகுமார்

பாஜக

10752

5

M.பாபு

சுயேச்சை

4098

6

A.V.M.லயன் ராஜன்

தே.மு.தி.க

3783

7

P.மதுசூதனபெருமாள்

எ.பி.எச்.எம்

695

8

P. ரமேஷ்

சுயேச்சை

317

9

U. நாகூர் மீரன் பீர் முகமத்

சுயேச்சை

235

10

P. மணிகண்டன்

சுயேச்சை

192

11

K.J. ஜெயசீலன்

எல்.ஜெ.பி

119

12

J. சுரேஷ்

சுயேச்சை

65

13

P. சிதம்பரப்பிள்ளை

சுயேச்சை

53

14

P. அண்ணாதுரை

சுயேச்சை

40

15

R. இளஞ்செழியன்

சுயேச்சை

32

119334

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

A.நாஞ்சில்முருகேசன்

அ.தி.மு.க

58819

2

R. மகேஷ்

தி.மு.க

52092

3

PON. ராதாகிருஷ்ணன்

பாஜக

33623

4

R. சுரேஷ்

எ.பி.எச்.எம்

588

5

R. மகேஷ்

சுயேச்சை

500

6

V. தனராஜ்

சுயேச்சை

407

7

S. சுரேஷ்

பி.எஸ்.பி

378

8

U. நாகூர் மீரான் பீர் முகமது

சுயேச்சை

225

9

E. பேச்சிமுத்து

சுயேச்சை

149

10

R. கிருஷ்ணன்

சுயேச்சை

88

11

N. இஸ்க்கிமுத்து

சுயேச்சை

82

12

S. ராமேஸ்வரன்

சுயேச்சை

68

147019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x