Published : 11 Mar 2021 01:54 PM
Last Updated : 11 Mar 2021 01:54 PM

58 - பென்னாகரம்

ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ஜிகே மணி (பாமக) அதிமுக
பி.என்.பி.இன்பசேகரன் திமுக
ஆர்.உதயகுமார் அமமுக
கே. ஷகிலா மக்கள் நீதி மய்யம்
இரா.தமிழழகன் நாம் தமிழர் கட்சி

தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலமான ஒகேனக்கல்லை உள்ளடக்கிய தொகுதி பென்னாகரம். இந்தத் தொகுதியின் எம்எல்ஏ-வாக திமுக-வைச் சேர்ந்த இன்பசேகரன் உள்ளார். 2016 சட்டப் பேரவை தேர்தலில் பாமக தமிழகம் முழுக்க தனித்து போட்டியிட்டபோது முதல்வர் கனவுடன் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த தொகுதியில் வன்னியர், இதர பிற்படுத்தப்பட்ட பல்வேறு சமூக மக்கள் உள்ளிட்டோர் அதிகம் வசிக்கின்றனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

தொகுதியில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி ஆகிய 2 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, தாசம்பட்டி, வட்டுவமன அள்ளி, செட்டிஅள்ளி, பி.கொல்ல அள்ளி, புலிகரை, செல்லியம்பட்டி, செக்கோடி, காளப்பன அள்ளி, குத்தால அள்ளி, பத்தல அள்ளி, பூமாண்ட அள்ளி, இண்டூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஏரியூர், நாகமரை உட்பட பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களும் இடம்பெற்றுள்ளன.

தொகுதியின் பிரச்சினைகள்:

ஒகேனக்கல் தரம் உயர்த்தப்படாத, போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத, சுகாதாரத்தில் பின் தங்கிய சுற்றுலா தலமாகவே இருந்து வருகிறது. அதிக வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதால் சுற்றுலா தலத்தை நம்பி வாழும் பல நூறு குடும்பங்கள் வருமானம் பாதித்து சிரமப்படுவது ஆண்டுதோறும் தொடர்கிறது.

ஏரியூர் அடுத்த நாகமரை பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பாலக்கோடு-பென்னாகரம்-ஏரியூர்-மேட்டூர் வழியாக ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்துக்கும் செல்லும் போக்குவரத்தின் பயண தூரம் கணிசமாக குறையும். இதன்மூலம் சாலையோரம் அமைந்துள்ள கிராமங்களும் வளர்ச்சி அடையும். இந்த கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு வழங்கி எளிதில் வறட்சிக்கு இலக்காகும் பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளை செழிப்பாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிலுவையில் உள்ளது. உள்ளூரில் போதிய வேலை வாய்ப்பின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம்பெயருவோர் இந்த தொகுதியில் அதிகம்.

கட்சிகளின் வெற்றி:

இந்த தொகுதியில் 1951-ம் ஆண்டு முதல் தற்போது வரை திமுக 5 முறையும், காங்கிரஸ், 3 முறையும், அதிமுக மற்றும் பாமக தலா 2 முறையும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 1 முறையும், ஜனதா கட்சி 1 முறையும், இந்திய பொதுவுடமை கட்சி 1 முறையும், சுயேட்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,24,888

பெண்

1,15,752

மூன்றாம் பாலினத்தவர்

7

மொத்த வாக்காளர்கள்

2,40,647

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.பி.முனுசாமி

அதிமுக

2

பி.என்.பி.இன்பசேகரன்

திமுக

3

என்.நஞ்சப்பன்

இந்திய கம்யூனிஸ்ட்

4

ஆர்.அன்புமணி

பாமக

5

ஜி.சிவகுமார்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

எஸ். கந்தசாமி கவுண்டர்

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

8050

29.32

1957

ஹேமலதா தேவி

காங்கிரஸ்

8791

31.59

1962

எம். வி. காரிவேங்கடம்

திமுக

26911

53.86

1967

பி. கே. சி. முத்துசாமி

காங்கிரஸ்

27913

49.2

1971

என். மாணிக்கம்

திமுக

33298

52.36

1977

கே. அப்புனு கவுண்டர்

ஜனதா கட்சி

17591

32.13

1980

பி. தீர்த்த ராமன்

காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்

34590

52.74

1984

எச். ஜி. ஆறுமுகம்

அதிமுக

44616

54.98

1989

என். நஞ்சப்பன்

சுயேச்சை

15498

21.09

1991

வி. புருசோத்தமன்

அதிமுக

49585

51.79

1996

ஜி. கே. மணி

பாமக

34906

31.63

2001

ஜி. கே. மணி

பாமக

49125

44.08

2006

பி. என். பெரியண்ணன்

திமுக

74109

---

2010

பி. என். பி. இன்பசேகரன்

திமுக

---

2011

என். நஞ்சப்பன்

இ பொ க

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

எம். என். இராஜா செட்டியார்

சுயேச்சை

6870

25.02

1957

டி. கே. குருநாத செட்டியார்

சுயேச்சை

5536

19.89

1962

எஸ். ஹேமலதா தேவி

காங்கிரஸ்

17303

34.63

1967

என். மாணிக்கம்

திமுக

26570

46.84

1971

பி. கே. சி. முத்துசாமி

காங்கிரஸ் (ஸ்தாபன)

30291

47.64

1977

கிருஷ்ணன்

அதிமுக

16932

30.92

1980

கே. மருமுத்து

திமுக

27481

41.9

1984

என். நஞ்சப்பன்

இந்திய பொதுவுடமைக் கட்சி

25518

31.45

1989

பி. சீனிவாசன்

அதிமுக(ஜெ)

14555

19.81

1991

என். எம். சுப்ரமணியம்

பாமக

30757

32.12

1996

எம். ஆறுமுகம்

இந்திய பொதுவுடமைக் கட்சி

34500

31.26

2001

கே. என். பெரியண்ணன்

சுயேச்சை

34729

31.16

2006

எஸ். ஆர். வெற்றிவேல்

அதிமுக

47177

---

2010

அதிமுக

---

2011

-

2006 சட்டமன்ற தேர்தல்

58. பென்னாகரம்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P.N. பெரியண்ணன்

தி.மு.க

74109

2

S.R. வெற்றிவேல்

அ.தி.மு.க

47177

3

P. தண்டபானி

தே.மு.தி.க

10567

4

V. முத்துலட்சுமி

சுயேச்சை

9871

5

M. பாலமுருகன்

சுயேட்சை

1738

6

E. பெரியண்ணன்

சுயேச்சை

1269

7

K. முருகன்

சுயேட்சை

1010

8

P. கந்தசாமி

பி.ஜே.பி

933

9

R. பாலு

சுயேச்சை

717

10

M. சேகர்

பி.எஸ்.பி

472

11

M. சுகுமார்

சுயேச்சை

451

12

A. உதயசங்கர்

சுயேச்சை

421

13

R. மாணிக்கம்

எஸ்.பி

406

14

T. பழனி

சுயேச்சை

344

15

P. சின்னசாமி

சுயேச்சை

231

16

ஆண்டி

சுயேச்சை

216

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

58. பென்னாகரம்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

N. நஞ்சப்பன்

சி.பி.ஐ

80028

2

P.N.P. இன்பசேகரன்

தி.மு.க

68485

3

M. முனுசாமி

சுயேட்சை

3047

4

K.P. கந்தசாமி

பி.ஜே.பி

2660

5

R. சண்முகம்

சுயேட்சை

1546

6

M. வெங்கடேசன்

பி.எஸ்.பி

1478

7

P. முனியப்பன்

சுயேச்சை

1208

8

K.K. சாமிகண்ணு

சுயேச்சை

853

9

A. முனிராஜ்

சுயேச்சை

685

10

P. பாலசுப்பிரமணியன்

சுயேச்சை

675

11

C. இளவரசன்

சுயேச்சை

650

12

K. பன்னீர்செல்வம்

சுயேச்சை

502

13

R. கமலாநாதன்

சுயேச்சை

471

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x