Published : 11 Mar 2021 01:28 PM
Last Updated : 11 Mar 2021 01:28 PM

122 - கிணத்துக்கடவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
செ. தாமோதரன் அதிமுக
குறிஞ்சி பிரபாகரன் திமுக
ரோகிணி கிருஷ்ணகுமார் அமமுக
ஏ. சிவா மக்கள் நீதி மய்யம்
ம.உமா ஜெகதீஷ் நாம் தமிழர் கட்சி

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தொகுதிகளில், பொள்ளாச்சி சாலையை மையப்படுத்தி அமைந்துள்ள தொகுதி கிணத்துக்கடவு. தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் கிணத்துக்கடவு 122-வது இடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் மற்ற தொகுதிகளை ஒப்பிடும் போது, அதிக பேரூராட்சிகளை உள்ளடக்கிய சட்டப்பேரவைத் தொகுதி என்ற சிறப்புப் பெயரும் இந்தத் தொகுதிக்கு உண்டு.

சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், ஏராளமான தனியார் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், வர்த்தகப் பகுதிகள் இந்தத் தொகுதியில் உள்ளன. கோவை மாவட்டத்தில் புகழ் பெற்ற, பொன் வேலாயுதசாமி மலைக்கோயில் இங்குள்ளது.

கவுண்டர் சமுதாயத்து மக்கள் இந்தத் தொகுதியில் அதிகளவில் வசிக்கின்றனர்.அவர்களுக்கு அடுத்ததாக இதர சமூக மக்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் அதிகளவில் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர். ஏராளமான கிராமப் பகுதிகள் இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்தாலும், மாநகராட்சியின் 7 வார்டுகள் இந்தத் தொகுதியை மையப்படுத்தி அமைந்துள்ளன. விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் அதிகளவில் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தப்படியாக, பல்வேறு தொழில்களை மேற்கொள்ளும் மக்கள் வசிக்கின்றனர்.

கோரிக்கைகள் :

கிராமங்கள் அதிகளவில் உள்ள தொகுதி என்பதால், இத்தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பந்தல் காய்கறி சாகுபடிகள் அதிகளவில் நடக்கின்றன. காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தொகுதியின் பிரதான சாலைகளில் இருந்து உட்புறத்தில் உள்ள கிராமப்புற சாலைகளுக்கு முழுமையாக பேருந்து சேவைகளை ஏற்படுத்த வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும். இந்தத் தொதிக்குட்பட்ட குறிச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லை.

இப்பகுதிகளில் தட்டுப்பாடு அற்ற சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும். இத்தொகுதிக்குட்பட்ட பகுதிளில் கோவை - பொள்ளாச்சி சாலை விரிவுபடுத்தப்பட்டது, குறிப்பிட்ட பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது தொகுதிவாசிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம், முக்கிய இடங்களில் சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இத்தொகுதிக்குட்பட்ட கற்பகம் கல்லூரி நான்கு முனை சந்திப்புப் பகுதியில் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க மேற்கண்ட பகுதியில் ரவுண்டானா அல்லது விபத்தை தடுக்க மாற்று வழிகளை செயல்படுத்த வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.

இத்தொகுதிக்குட்பட்ட வெள்ளலூரில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு தேங்கிக் காணப்படும் பல லட்சம் டன் கலப்புப் குப்பையால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து மாசுபடுகிறது. தேங்கியுள்ள குப்பையை அழிக்க பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மாநகராட்சியின் அறிவிப்பு தொடர்ந்து முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல், குப்பைக்கிடங்குக்கு வரும் குப்பையின் அளவை குறைக்க, தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படும் என்ற திட்டமும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல், மற்றொரு முக்கிய பிரச்சினையாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தீப்பிடிப்பு விவகாரம் உள்ளது. அடிக்கடி குப்பைக்கிடங்கில் தீ பிடித்து எழும் புகையால் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இத்தொகுதியின் ஒரு பகுதி கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கேரளாவில் இருந்து கோவைக்கு மர்மநபர்களால் கொண்டு வரப்படும் கழிவுக் குப்பை, மருந்துக் கழிவுகளை தடுக்கவும் முறையான தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினரின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும், மூலப் பொருட்களின் விலையை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தொகுதி க்குட்பட்ட தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். அதேபோல், கிணத்துகடவு பகுதியில் மானாவாரி பயிர்களான தக்காளி, காய்கறி உற்பத்தி அதிகம் நடக்கிறது. காய்கறிகளுக்கு குறைந்தப்பட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை ஆகும்.

இத்தொகுதியில் உள்ள பகுதிகள் :

மாநகராட்சியின் 94, 95, 96, 97, 98, 99 , 100 ஆகிய வார்டுகள் இத்தொகுதியில் உள்ளன.மாதம்பட்டி, தீத்திபாளையம், செட்டிபாளையம், மாவுத்தம்பதி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள், குறிச்சி, வெள்ளலூர் , மதுக்கரை , எட்டிமடை, திருமலையம்பாளையம், ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சிகள், பொள்ளாச்சி வட்டம் , சொலவம்பாளையம், வடபுதூர், குதிரையாலயம்பாளையம், ஒட்டையாண்டிபொரம்பு, சொக்கனூர், சங்கராபுரம், முத்தூர் மற்றும் கோடங்கிபாளையம் கிராமங்கள் அடங்கியுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அ.சண்முகம் 89,042 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் 87,710 வாக்குகள், பாஜக சார்பில் முத்துராமலிங்கம் 11,354 வாக்குகள், மதிமுக சார்பில் ஈஸ்வரன் 8,387 வாக்குகள் பெற்றனர்.

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

அ.சண்முகம்

அதிமுக

2

குறிச்சி பிரபாகரன்

திமுக

3

வே.ஈஸ்வரன்

மதிமுக

4

ரா. சின்னச்சாமி

பாமக

5

வே.முத்துராமலிங்கம்

பாஜக

6.

உ. செல்வக்குமார்

நாம் தமிழர்

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,59,148

பெண்

1,64,955

மூன்றாம் பாலினத்தவர்

42

மொத்த வாக்காளர்கள்

3,24,145

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1967

கண்ணப்பன்

திமுக

40645

1971

மு. கண்ணப்பன்

திமுக

47776

1977

கே. வி. கந்தசாமி

அதிமுக

25909

1980

கே. வி. கந்தசாமி

அதிமுக

42822

1984

கே. வி. கந்தசாமி

அதிமுக

50375

1989

கே. கந்தசாமி

திமுக

36897

1991

என். எசு. பழனிசாமி

அதிமுக

64358

1996

எம். சண்முகம்

திமுக

49231

2001

எஸ். தாமோதரன்

அதிமுக

55958

2006

எஸ். தாமோதரன்

அதிமுக

55493

2011

எஸ். தாமோதரன்

அதிமுக

94123

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1967

எஸ். கவுண்டர்

காங்கிரஸ்

20691

1971

எஸ். டி. துரைசாமி

சுயேச்சை

22049

1977

மு. கண்ணப்பன்

திமுக

20589

1980

எஸ். டி. துரைசாமி

காங்கிரஸ்

37093

1984

மு. கண்ணப்பன்

திமுக

38492

1989

என். அப்பாதுரை

அதிமுக (ஜெ)

22824

1991

கே. கந்தசாமி

திமுக

31792

1996

கே. எம். மயில்சாமி

அதிமுக

35267

2001

எம். சண்முகம்

திமுக

22178

2006

கே. வி. கந்தசாமி

திமுக

50343

2011

மு. கண்ணப்பன்

திமுக

63857

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

தாமோதரன்.S

அதிமுக

55493

2

கந்தசாமி.K.V

திமுக

50343

3

லதாரணி.C.B

தேமுதிக

5449

4

முத்துராமலிங்கம்.V

பாஜக

2267

5

ரங்கரசு.R

சுயேச்சை

1937

6

ஆரன்.M

சுயேச்சை

1142

7

அமிர்தலிங்கம்.V

சுயேச்சை

792

8

லக்ஷ்மி.V.P

பகுஜன் சமாஜ் கட்சி

389

117812

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

தாமோதரன்.S

அதிமுக

94123

2

கண்ணப்பன்.M

திமுக

63857

3

தர்மலிங்கம்.K

பாஜக

4587

4

இளங்கோ.B

லோக் சட்ட கட்சி

1737

5

நாகராஜ்.S

சுயேச்சை

1592

6

முருகானந்தம்.K

சுயேச்சை

1069

7

நூர் முஹம்மத்.A

சுயேச்சை

602

167567

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x