Published : 11 Mar 2021 01:41 PM
Last Updated : 11 Mar 2021 01:41 PM

14 - வில்லிவாக்கம்

வில்லிவாக்கத்தில் குளக்கரை பாதை அமைக்கப்பட்டு நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
பிரபாகர் அதிமுக
அ.வெற்றி அழகன் திமுக
சுபமங்களம் டில்லிபாபு அமமுக
ஸ்ரீஹரன் பாலா மக்கள் நீதி மய்யம்
இரா.ஸ்ரீதர் நாம் தமிழர் கட்சி

இந்தியாவில் பரப்பளவிலும், வாக்காளர் எண்ணிக்கையிலும் பெரிய தொகுதியாக இருந்த வில்லிவாக்கம், தொகுதி மறுவரையறைக்கு பின் சராசரி சட்டமன்ற தொகுதியாக மாறிவிட்டது. வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திருமங்கலம் வாட்டர் டேங்க் தொடங்கி, அண்ணாநகர் ரயில் நிலையம், சிட்கோ நகர், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ஐ.சி.எப்.), காந்தி நகர், அயனாவரம் மார்க்கெட், கெல்லிஸ் சிக்னல் வரை நீள்கிறது. தொகுதி மறுசீரமைப்பின்போது புரசைவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதில் உள்ள சில பகுதிகள் வில்லிவாக்கம் தொகுதியில் சேர்க்கப்பட்டது.

ஐ.சி.எப்., இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மனநல மருத்துவமனை, சிட்கோ நகர், மிகப் பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் ஆகியன வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்கள் ஆகும்.

இத்தொகுதியில் வன்னியர், நாயுடு, தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் வசிக்கின்றனர். முதலியார், ஆதி ஆந்திர மக்கள், தென்மாவட்டங்களைச் சேர்ந்த நாடார் ஆகியோரும் உள்ளனர். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிட்கோ நகரும் ஒன்று. சிட்கோ நகரில் மழைநீர் வடிகால் சரிவர பராமரிக்கப்படாததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, அங்குள்ள குறு, சிறு தொழில்களில் சில தொழில்கள் மட்டுமே வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டன என்கின்றனர் இப்பகுதி மக்கள்

இத்தொகுதியில் உள்ள அகத்திய நகரில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அதை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் வந்து பார்த்து தண்ணீர் தொட்டியை இடித்துவிட நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லிவிட்டுப் போனார்கள் அவ்வளவுதான் என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

பட்டா பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகள் அவ்வளவாக இல்லை என்று கூறும் மக்கள், வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிக்கப்படாததால் பெரிதும் அவதிப்படுவதாகக் கூறுகின்றனர்.

வில்லிவாக்கத்தில் இருந்து கொளத்தூர், பெரம்பூர், ரெட்ஹில்ஸ், மாதவரம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு செல்வதற்காக வாகன சுரங்கப் பாதை கட்டப்பட்டது. ரயில்வே கேட் 2 உள்ள இடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. ரயில்வே தனது பணியை 8 மாதத்தில் முடித்துவிட்டது. ஆனால், மேம்பாலத்திற்கு இருபுறம் உள்ள பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முடிக்க மிகவும் தாமதமாவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பணிகள் முடிக்கப்படாததால் மேற்கண்ட வாகன சுரங்கப் பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இத்தொகுதியில் உள்ள மிகப் பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் உள்ள குளங்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில், 1977-ம் ஆண்டுமுதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற 10 தேர்தல்களில் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக 4 தடவை, அதிமுக 2 தடவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தடவை, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு தடவை வெற்றி பெற்றுள்ளது.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,25,030

பெண்

1,29,899

மூன்றாம் பாலினத்தவர்

63

மொத்த வாக்காளர்கள்

2,54,992

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

ஐ.சி.எப்., இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மனநல மருத்துவமனை, சிட்கோ நகர் ஆகியன வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்கள் ஆகும். இத்தொகுதியில் வன்னியர், நாயுடு, தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் வசிக்கின்றனர். முதலியார், ஆதி ஆந்திர மக்கள், தென்மாவட்டங்களைச் சேர்ந்த நாடார் ஆகியோரும் உள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிட்கோ நகரும் ஒன்று. சிட்கோ நகரில் மழைநீர் வடிகால் சரிவர பராமரிக்கப்படாததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, அங்குள்ள குறு, சிறு தொழில்களில் சில தொழில்கள் மட்டுமே வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது செயல்படுகின்றன. பல தொழில்கள் இன்னமும் பாதிப்பில் இருந்து மீளவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

இத்தொகுதியில் உள்ள அகத்திய நகரில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அவ்வாறு இடிந்து அருகில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவதற்கு முன்பு அத்தண்ணீர் தொட்டியை இடித்துவிடும்படி அப்பகுதி மக்கள் விடுத்து வரும் கோரிக்கை செவிமடுக்கப்படாமல் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் வந்து பார்த்து தண்ணீர் தொட்டியை இடித்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டுப் போனார்கள் அதோடு சரி என்கின்றனர் மக்கள்.

நியூ ஆவடி ரோட்டில் சென்னைக் குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் பாரதி நகர், கிழக்கு ஏரிக்கரையில் வசிக்கும் மக்களும் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். சென்னையிலே அவர்களுக்கு மாற்று இடம் தவருவதற்கான கள ஆய்வு அண்மையில்தான் நடத்தப்பட்டது.

ஜி.கே.எம். காலனியில் இரண்டாவது ரயில்வே கேட் உள்ளது. இங்கு போக்குவரத்து பிரச்சினை நீண்டகாலமாக இருப்பதால் அங்கே சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

1977-ம் ஆண்டுமுதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 9 தேர்தல்களில் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக 3 தடவை, அதிமுக 2 தடவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தடவை, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு தடவை வெற்றி பெற்றுள்ளது.

தொகுதி – கடந்து வந்த தேர்தல்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1977

கே. சுப்பு

திமுக

37327

41.07

1980

ஜே. சி. டி. பிரபாகரன்

அதிமுக

57192

47.84

1984

வி. பி. சித்தன்

இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட்)

81595

48.21

1989

டபள்யு. ஆர். வரதராசன்

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

99571

46.77

1991

இ. காளன்

காங்கிரஸ்

118196

55.49

1996

ஜே. எம். ஆரூண் ரசித்

தமாகா

194471

70.24

2001

டி. நெப்போலியன்

திமுக

164787

48.21

2006

பி. அரங்கநாதன்

திமுக

278850

---

2011

ஜே. சி. டி. பிரபாகரன்

அ.தி.மு.க

---

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1977

ஆர்.ஈசுவர் ராவ்

அதிமுக

29429

32.38

1980

கே. சுப்பு

திமுக

56489

47.25

1984

ஜே. சி. டி. பிரபாகரன்

அதிமுக

80549

47.59

1989

டி பாலசுப்பரமணியன்

அதிமுக (ஜெ)

40150

18.86

1991

டபள்யுஆர். வரதராசன்

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

71963

33.79

1996

எம். ஜி. மோகன்

காங்கிரஸ்

46724

16.88

2001

எ. செல்லகுமார்

தமாகா

155557

45.51

2006

ஜி. காலன்

அதிமுக

248734

---

2011

க. அன்பழகன்

தி.மு.க

---

---

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2006 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ரங்கநாதன்

திமுக

278850

2

காளன்

அதிமுக

248734

3

வேல்முருகன்

தேமுதிக

51892

4

ரவிசுந்தரம்

பிஜேபி

9202

5

பிரேமா

எல் கே பி டி

6473

6

தியாகராஜன்

சுயேச்சை

2610

7

சதீஸ் குமார் K P

சுயேச்சை

2189

8

மோகன்

சுயேச்சை

2051

9

ஸ்ரீநிவாசன்

பி எஸ் பி

1670

10

சதீஷ்குமார் .S

சுயேச்சை

1651

11

மகாலட்சுமி

எஸ் பி

745

12

பழனிவேல்

சிபிஐ( M L )

741

13

கணேசன்

எ ஐ எப் பி

731

14

வெங்கடேசன்

எல் ஜே பி

617

15

ஜோஷி

சுயேச்சை

611

16

குமார்

சுயேச்சை

473

17

பாலமுருகன்

சுயேச்சை

371

18

மோகன்குமார்

சுயேச்சை

333

19

கருணாகரன்

சுயேச்சை

322

20

ராஜேந்திரன்

சுயேச்சை

312

21

அசோக்

சுயேச்சை

279

22

குணசேகரன்

சுயேச்சை

227

611084

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ஜே. சி. டி. பிரபாகரன்

அதிமுக

68612

2

Kஅன்பழகன்

திமுக

57830

3

மாசான முத்து

பா ஜ க

1850

4

K.P.சதீஷ் குமார்

எம்எம்கேஎ

589

5

மதியழகன்

பி எஸ் பி

528

6

வள்ளல்

சுயேச்சை

383

7

சாந்தகுமார்

சுயேச்சை

238

8

பில் லிக்ஸி

சுயேச்சை

197

9

பிரதாபன்

சுயேச்சை

189

10

குணசேகரன்

சுயேச்சை

116

11

சரவணன்

சுயேச்சை

116

12

அய்யவூ

சுயேச்சை

90

13

பாஸ்கர்

சுயேச்சை

90

130828

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x