Published : 11 Mar 2021 01:42 PM
Last Updated : 11 Mar 2021 01:42 PM

22 - விருகம்பாக்கம்

கோயம்பேடு சந்தை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
விருகை ஏ.சூ. ரவி அதிமுக
ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா திமுக
ப.பார்த்தசாரதி அமமுக
சினேகன் மக்கள் நீதி மய்யம்
த.சா.ராசேந்திரன் நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் மிகப்பெரிய சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றான வில்லிவாக்கம் தொகுதியின் சில பகுதி, ஆலந்தூர் தொகுதியின் சில பகுதிகளை பிரித்து புதிதாக 2009-ம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்டது.

தென் சென்னை மக்களவை தொகுதிக்குள் விருகம்பாக்கம் தொகுதி இடம்பெற்றுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் மற்றும் தொழிலாளர்கள் விருகம்பாக்கம் தொகுதியில் வசிக்கின்றனர்.

தேமுதிக தலைவர் விஜய்காந்த், தெலுங்கான ஆளுநர் தமிழிசை ஆகியோரது வீடுகள் இந்த தொகுதியில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற ஏவிஎம் ஸ்டுடியோ, ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி, கனி, பூ சந்தை ஆகியவை விருகம்பாக்கம் தொகுதிக்குள் அமைந்துள்ளன.

தொகுதி பிரச்சினைகள்

விருகம்பாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆர்.நகர், ஜாபர்கான் பேட்டை, கோயம்பேடு, கே.கே.நகர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. எம்.ஜி.ஆர் நகரில் உள்ள பெரியார் தெரு, வள்ளல்பாரி தெரு, திருவள்ளூர் தெரு உள்பட தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படவில்லை.

இதனால், ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த தொகுதிக்குப்பட்ட சில பகுதிகளில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாக உள்ளது. எனவே, மழைநீர் செல்வதற்கான வடிகால்வாய்கள் இல்லாத பகுதிகளில் புதிதாக அமைக்க வேண்டும், ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்வாய்களை பராமரிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும், சூளைபள்ளம் பகுதியில் ஆற்றங்கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், ஒவ்வொரு மழை காலத்திலும் எம்.ஜி.ஆர்.நகர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் மழைநீர் கலந்து வருவதற்கு நிரந்திர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

கோயம்பேடு சந்தையில் போதிய அடிப்படை வசதி செய்துத்தரப்படவில்லை. சந்தையில் வாகன போக்குவரத்து நெரிசல், கழிவுநீர் வடிகால் பிரச்சனை உள்ளது. வாகன நெரிசலை குறைக்க சாலைகளை அகலப்படுத்த வேண்டும், கழிவு நீர் வடிகால் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், கோயம்பேடு சந்தையில் போதிய அடிப்படை வசதியை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்டவை இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

விருகம்பாக்கம் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த வி.என்.விருகை ரவி உள்ளார். இவர், 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் கே.தனசேகரனை தோற்கடித்தார்.

வி.என்.விருகை ரவி- அதிமுக-பெற்ற வாக்குகள்-65,979

கே. தனசேகரன்-திமுக- பெற்ற வாக்குகள்-63,646

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,39,455

பெண்

1,39,804

மூன்றாம் பாலினத்தவர்

85

மொத்த வாக்காளர்கள்

2,79,344

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பார்த்தசாரதி

தேமுதிக

71524

2

தனசேகரன்

திமுக

57430

3

ஸ்ரீதரன்

பிஜேபி

7525

4

நாகவேல்

சுயேச்சை

3431

5

பாஸ்கர்

பு பா

1447

6

சுப்பிரமணியம்

பிஎஸ்பி

969

7

பார்த்தசாரதி

சுயேச்சை

670

8

ஸ்ரீதர்

சுயேச்சை

540

9

தியாகராஜன்

சுயேச்சை

309

10

வளையாபதி

சுயேச்சை

224

144069

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x