Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

விழுப்புரத்துக்கு இன்று அமித்ஷா வருகை- பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட பிரிவின் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு, சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக அவர் இன்று காலை காரைக்காலில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, விழுப்புரம் வருகிறார்.

அமித்ஷா வருவதையொட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தையொட்டி விழுப்புரம் ஜானகிபுரத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் அமித்ஷாவை வரவேற்று பாஜகவினர், கட்சிக் கொடிகள், விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.

விழுப்புரத்துக்கு அமித்ஷா வருகையையொட்டி டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x