Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

பிரதமர் மோடியின் வழியில் மு.க.ஸ்டாலின்!- ‘பிராம்ப்டர்’ கருவி வைத்து பிரச்சாரம்

பிரதமர் மோடி ஹிந்தியில் தனக்கே உரித்தான பாணியில் சரளமாகப் பிரச்சாரம் செய்யக் கூடியவர். ஹிந்தி அளவு ஆங்கிலத்திலும் தடையின்றி பேசுவதற்காக மோடி பிரதமரானது முதல் ‘பிராம்ப்டர்’ கருவியைப் பயன்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் அவர் ‘பிராம்ப்டர்’ கருவியைப் பயன்படுத்துவது யாருக்கும் தெரியாமல் இருந்தபோது, மோடியின் பிரமாதமான ஆங்கில உரையைக் கேட்டு, அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அதன்பிறகுதான், மோடி பிராம்ப்டர் கருவியை பயன்படுத்துவது தெரியவந்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது பிரச்சாரத்துக்கு ‘பிராம்ப்டர்’ கருவியைப் பயன்படுத்தினார். அவரைப் பார்த்து பிரதமர் மோடியும் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர்.

தற்போது மோடியைப் போல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தனது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார மேடைகளில் ‘பிராம்ப்டர்’ கருவி மூலம் பேசி வருகிறார். சமீப காலமாக ஸ்டாலின் பொது நிகழ்ச்சிகள் மட்டுமில்லாது, கட்சி நிகழ்ச்சிகளில் பேசும்போதும் சில தகவல்களை தவறுதலாகப் பேசி, அது சமூக வலைத்தளங்களில் பரவி விவாதப் பொருளானது.

அதனால், அதுபோன்ற தவறுகளும், தர்மசங்கடமான நிகழ்வும் தேர்தல் பிரச்சாரத்தில் நடக்காமல் இருக்கவும், ஒவ்வொரு மாவட்டப் பிரச்சினைகளையும் பொதுமக்களுக்கு எளிமையாகப் புரியும்படி துல்லியமாக, அழகாகப் பேசவும், அவரது பிரச்சார சுற்றுப் பயணத்தை வடிவமைக்கும் ‘ஐ-பேக்’நிறுவனம் கொடுத்த ஐடியா அடிப்படையில் ஸ்டாலின் ‘பிராம்ப்டர்’ மூலம் தற்போது பிரச்சாரம் செய்துவருவதாக கட்சியினர் கூறுகின்றனர்.

இருபுறங்களிலும் இருக்கும்

இந்த ‘பிராம்ப்டர்’ கருவி, மேடையில் பேசும் தலைவர்கள் முன் இடது, வலது புறங்களில் மிகவும்மெல்லிய உயரமான கம்பியில் பொருத்தப்படுகிறது. இந்தக் கருவிகள், கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

கணினியில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பேச்சுகளை எழுத்து வடிவமாக ‘பிராம்ப்டர்’ கருவியில் ஓட விடுவர். ஸ்டாலின் நின்றபடி இந்தக் கருவியைப் பார்த்து பேசும்போது எழுத்துகள் நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால், மேடை முன்புஇருப்பவர்களுக்கோ, டிவியில்ஸ்டாலின் பேச்சை பார்ப்பவர்களுக்கோ, அவர் மக்களை பார்த்துஇயல்பாகப் பேசுவது போல இருக்கும். ஸ்டாலினின் பிரச்சாரம் தற்போது வரவேற்பைப் பெற ‘பிராம்ப்டர்’ கருவியும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x