தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி தொகுதி
Updated on
1 min read

தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு உருவான மிக முக்கிய தொகுதி தூத்துக்குடி. முந்தைய திருச்செந்தூர் தொகுதியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதி.

பெருமளவு கிராமப்புற பகுதிகளை கொண்ட இந்த தொகுதி அதிகமாக விவசாயம் நடக்கும் பகுதி. தாமிரபரணி பாசனப்பகுதியான ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி போன்றவையும், வறண்ட பகுதிகளான கோவில்பட்டி, ஒட்டபிடாரம் போன்றவையும் இந்த தொகுதிக்குள் உள்ளன. சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் மட்டுமின்றி பல தொழிற்சாலைகளும் தூத்துக்குடி பகுதியில் அமைந்துள்ளன. தீப்பெட்டி,கடலை மிட்டாய் தொழிலுக்கு பெயர் பெற்ற கோவில்பட்டியும் இந்த தொகுதிக்குட்பட்ட பகுதி.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

தூத்துக்குடி

திருச்செந்தூர்

கோவில்பட்டி

ஸ்ரீவைகுண்டம்

ஒட்டபிடாரம் (எஸ்சி)

விளாத்திகுளம்

தற்போதைய எம்.பி

ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சி      வேட்பாளர்                          வாக்குகள்     

அதிமுக        ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி   366052

திமுக          ஜெகன்                         242050

ஜோயல்        மதிமுக                        182191

காங்கிரஸ்      ஏபிசிவி சண்முகம்              63080

ஆம் ஆத்மி     புஷ்பராயன்                     26476

சிபிஐ           மோகன்ராஜ்                    14993

முந்தைய தேர்தல்கள்

ஆண்டு    வென்றவர்                2ம் இடம்  

1980  கோசல்ராம், காங்               சவுந்திரபாண்டியன், ஜனதா

1984  கோசல்ராம், காங்               ஜவகர்லால், ஜனதா

1985 (இடைத்தேர்தல்)

  தனுஷ்கோடி ஆதித்தன், காங்       பொன்.விஜயராகவன், ஜனதா

1989  தனுஷ்கோடி ஆதித்தன், காங்    கார்த்திகேயன், திமுக

1991  தனுஷ்கோடி ஆதித்தன், காங்         ஆண்டன் கோமஸ், ஜனதாதளம்

1996  தனுஷ்கோடி ஆதித்தன், தமாகா       ஜஸ்டின், காங்கிரஸ்

1998  ராமராஜன், அதிமுக                  தனுஷ்கோடி ஆதித்தன், தமாகா

1999  ஜெயசீலன், திமுக               பி.பி.ராஜன், அதிமுக

2004  ராதிகா செல்வி, திமுக          தாமோதரன், அதிமுக

தூத்துக்குடி தொகுதி

2009  ஜெயதுரை, திமுக               சிந்தியா பாண்டியன், அதிமுக  

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

தூத்துக்குடி           : கீதா ஜீவன், திமுக

திருச்செந்தூர்         : அனிதா. ராதாகிருஷ்ணன், திமுக

கோவில்பட்டி        : கடம்பூர் ராஜூ, அதிமுக

ஸ்ரீவைகுண்டம்       : எஸ்.பி. சண்முகநாதன், அதிமுக

ஒட்டபிடாரம் (எஸ்சி): சுந்தர்ராஜ், அதிமுக

விளாத்திகுளம்       : உமா மகேஸ்வரி, அதிமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக)

கனிமொழி கருணாநிதி (திமுக)

புவனேஸ்வரன் (அமமுக)

பொன் குமரன் (மநீம)

கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் (நாம் தமிழர்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in