Published : 08 Apr 2019 19:30 pm

Updated : 09 Apr 2019 16:50 pm

 

Published : 08 Apr 2019 07:30 PM
Last Updated : 09 Apr 2019 04:50 PM

கள நிலவரம்: சேலம் தொகுதி யாருக்கு?

சேலத்து மாம்பழம் உலகப் பிரசித்தி பெற்றது. அங்குள்ள ஏற்காடு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. எட்டு வழிச் சாலை தொடர்பான எதிர்ப்புக் குரல்கள் அண்மையில் சேலத்தில் எழுந்தன.

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் ஒருவருக்குகொருவர் சளைக்காமல் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரபலமான நபர்களைக் கொண்டு பிரச்சாரம் செய்வதில் திமுக தரப்பு சற்று வேகம் காட்டி வருகிறது.

திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாக்களிக்க வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நடிகர்கள் வாசு விக்ரம், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஹைலைட்டாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 12-ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.

அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், அன்புமணி ராமதாஸ், நடிகர்கள் சரத்குமார், போண்டா மணி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 14-ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். 

அதிமுக- திமுக வேட்பாளர்களுக்கு இடையே, அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வமும் போட்டியாளராக இருக்கிறார். சேலம் மாவட்ட அதிமுகவினருக்கு நன்கு பரிச்சயமான மாவட்டச் செயலாளராக இருந்தவரான எஸ்.கே.செல்வம், அதிமுகவின் வாக்குகளை மட்டுமல்லாது, திமுகவின் வாக்குகளையும் கணிசமாகப் பிரித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி சேலத்தில் திமுக-அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எனினும், வெற்றி யாருக்கு என்பதைக் கணிப்பதில் சற்று குழப்பமான நிலை நிலவுகிறது.

 

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

சேலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை முந்துகிறார் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன். இவர் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர். எஸ்.ஆர்.பார்த்திபனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இரண்டாம் இடத்தில் கே.ஆர்.எஸ்.சரவணன் உள்ளார். 3-ம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜா அம்மையப்பன் உள்ளார்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamaden

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author