Published : 27 Mar 2019 05:33 AM
Last Updated : 27 Mar 2019 05:33 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு; இன்று பரிசீலனை: மக்களவைத் தேர்தலுக்கு 1,263 பேர், சட்டப்பேரவைக்கு 490 பேர் மனு

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று மாலையுடன் நிறை வடைந்தது. மக்களவைத் தொகுதி வேட் பாளர்களாக 1,263 பேரும் 18 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர்களாக 490 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடக்கிறது. இதன்படி 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் கூடவே தமிழகத் தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது.

இதற்காக கடந்த மார்ச் 19-ம் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அன்றில் இருந்தே வேட்புமனுத் தாக்கலும் தொடங்கியது. மார்ச் 26-ம் தேதி வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில், மக்களவைக்கு 20 மனுக்களும் சட்டப்பேரவை தேர்தலுக்கு 2 வேட்புமனுக்களும் மட்டுமே தாக்கலாகின.

அடுத்து வந்த 22, 25-ம் தேதிகளில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர் களில் பெரும்பாலானவர்கள் வேட்பு மனுக் களை தாக்கல் செய்தனர். மார்ச் 22-ம் தேதி பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக), டி.ஆர்.பாலு (திமுக), அன்புமணி (பாமக), எல்.கே.சுதீஷ் (தேமுதிக), கே.பி.முனுசாமி (அதிமுக), ரவீந்திரநாத்குமார் (அதிமுக), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் 25-ம் தேதி, மு.தம்பிதுரை (அதிமுக), தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக), தொல்.திருமாவளவன் (விசிக), சு.திருநாவுக்கரசர் (காங் கிரஸ்), கனிமொழி (திமுக), பாரிவேந்தர் (ஐஜேகே), ஹெச்.வசந்தகுமார் (காங் கிரஸ்), கமீலா நாசர் (மக்கள் நீதி மய்யம் கட்சி) உள்ளிட்ட பல வேட் பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதேபோல், 18 சட்டப்பேரவை தொகுதி களுக்காக அதிமுக, திமுக வேட்பாளர் கள் அதிகளவில் வேட்பு மனுக்களை தாக் கல் செய்தனர். திமுக சார்பில், செ.கிருஷ்ண குமார் (அரூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), இலக்கியதாசன் (மானாமதுரை), அதிமுக சார்பில் ஒசூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் மனைவி ஜோதி உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இறுதி நாளான நேற்று, காலை 10 மணி முதலே அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் வேட்பாளர்களால் நிரம்பி வழிந்தன. மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுதவிர, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் ஏ.ஜி.மவுரியா (வடசென்னை), ரங்கராஜன் (தென் சென்னை) உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), பி.பழனியப்பன் (தருமபுரி), பார்த்திபன் (அரக்கோணம்) உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்

மக்களவைக்கு நேற்றிரவு 11 மணி நிலவரப்படி 1,125 ஆண்கள், 136 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1,263 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதிகபட்சமாக, தூத்துக்குடியில் 62 பேரும் குறைந்தபட்சமாக தென்காசி தொகுதியில்  12 பேரும் மனு செய்துள்ளனர்.

 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 414 ஆண்கள், 76 பெண்கள் என மொத்தம் 490 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிகபட்சமாக பெரம்பூரில் 68 பேரும் குறைந்தபட்சமாக மானாமதுரையில் தலா 9 பேரும் மனு செய்துள்ளனர்.

பார்வையாளர்கள் முன்னிலையில்..

வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறை வடைந்த நிலையில், மனுக்கள் அனைத் தும் இன்று (மார்ச் 27) காலை 10 மணி முதல் அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரி களால், தேர்தல் பொது பார்வையாளர் கள் முன்னிலையில் பரிசீலிக்கப்படும். அப்போது, வேட்பாளர்கள் தேர்தல் நடத் தும் அதிகாரிகள் அலுவலகங்களில் அனு மதிக்கப்படுவார்கள்.

வேட்பு மனுக்களை மார்ச் 28 மற்றும் 29-ம் தேதி மாலை 3 மணி வரை திரும்பப் பெறலாம். அதன்பின், இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x