Last Updated : 05 Mar, 2019 08:08 AM

 

Published : 05 Mar 2019 08:08 AM
Last Updated : 05 Mar 2019 08:08 AM

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இருந்தாலும் வலுவான திமுக கூட்டணிக்கே வெற்றி- இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பலமுனைப் போட்டி இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளை எதிர்ப்பதில் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக வலுவாக இருப்பதால் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உறுதிபட தெரிவித்தார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

வாக்காளர்கள், புதிய வாக்காளர்களைக் கவர உங்கள் பிரச்சார உத்தி என்ன?இத்தேர்தலில் முதன்முறையாக CPI Tamilnadu என்ற யூ-டியூப்பை முழுஅளவில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இளைய தலைமுறையினரிடம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் வெகுவாகப் போய் சேர்ந்துள்ளன.

மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் பற்றி..

ஆண்டுக்கு 2 கோடி பேருக்குவேலைவாய்ப்பு, கருப்பு பணம் மீட்பு, வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் ஆகியவை தொடர்பாக மத்திய அரசு அளித்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் முன்னாள்முதல்வர்கள் அண்ணா முதல் ஜெயலலிதா வரை, மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் மாநில உரிமைகளை விட்டுத்தரவில்லை. ஆனால், தற்போதைய அரசு மாநில உரிமைகள் பற்றி கவலைப்படவில்லை. ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்றஒற்றை குறிக்கோளில் செயல்படுகின்றனர். எனவே, ‘இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம்’ என்றமுழக்கம் பிரதானமாக இருக்கும்.

திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளாரே?

காவிரி நதிநீர், நீட் தேர்வு, இயற்கை சீற்ற நிவாரணம் தொடர்பான மக்கள் பிரச்சினைகளில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 9 கட்சிகள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இயக்கம் நடத்தினோம். அதுவே அரசியல் அணியாக மாறியது. இயல்பாக சேர்ந்த இது சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் போன்ற திட்டங்கள் தேர்தலில் பிரதிபலிக்குமா?

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி பல சாகசங்களை மேற்கொள்கிறார். தேர்தல் முடிவுகள்பாஜகவுக்கு எதிராக அமைந்ததால், இந்தச் சரிவில் இருந்து தற்காத்துக் கொள்ள, மேற்கண்ட திட்டங்களை அறிவித்துள்ளனர். 5 ஆண்டுகளாக செய்யாமல், இப்போது தேர்தலை மனதில் கொண்டு செய்துள்ளனர்.

பலமுனைப் போட்டி உருவாகி, திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறதே?

டிடிவி தினகரன் அதிமுக வாக்குகளை பிரிப்பார். கமல்ஹாசனால் எங்கள் அணி வாக்குகள் பாதிக்காது. ஏனென்றால், அரசியல் ரீதியாக, அமைப்பு ரீதியாக நாங்கள் மிகுந்த பலத்தோடு இருப்பதால் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கம்யூனிஸ்ட்கள், வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகிறாரே?

நெய்வேலி பழுப்பு நிலக்கரிநிறுவனம், சேலம் உருக்காலைஉள்ளிட்ட திட்டங்கள் யாரால் வந்ததுஎன்றும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் எந்தெந்த இடங்களில்அணை கட்டலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு கொடுத்தது. பாஜக அரசுகார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்குவங்கி இல்லை என கூறப்படுகிறதே?

எந்தக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை நிரூபிக்கவில்லை. 234 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் வாக்குசதவீதத்தை கணக்கிட்டுச் சொல்ல முடியும். நாங்கள் இன்னும் வளர வேண்டும் என்பதை விமர்சனப்பூர்வமாக, மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறோம். அதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x