Last Updated : 30 Mar, 2019 07:33 AM

 

Published : 30 Mar 2019 07:33 AM
Last Updated : 30 Mar 2019 07:33 AM

ஜாதி மட்டுமே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்காது- திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தன் மகன்கவுதம சிகாமணியை களமிறக்கியுள்ளார்.

தேர்தல் பரபரப்புக்கு இடையே ‘இந்து தமிழ்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அரசியலில், குறிப்பாக வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே..?

ஜாதி அடிப்படையில் இல்லை என்று சொல்ல முடியாது. ஓரளவுக்கு உள்ளது. இதுவே ஒரு வேட்பாளரின் வெற்றியை தீர்மானிப்பதும் இல்லை.

பாலியல் வழக்கு விவகாரம், சிபிஐயிடம் கொடுக்கப்பட்டுள்ளது பற்றி...?

திமுக சில வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் போதெல்லாம் தட்டிக் கழித்த இந்த அரசு, தற்போது தானே முன்வந்து இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்திருப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதையே காட்டுகிறது.

இதற்காகத்தான், சிபிஐ விசாரணைகூட உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியுள்ளார்.

அதிமுக ஆட்சியின் ஊழல்பற்றி புத்தகமே எழுதி வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் அதை ஆளுநரி டம் புகாராக அளித்தார். 8 வழிச்சாலையை எதிர்த்தார். இதையெல்லாம் செய்துவிட்டு தற்போது அதிமுக கூட்டணிக்குச் சென்றவர், பாலியல் விவகாரத்தில் பட்டும் படாமல் அறிக்கை அளித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

கட்சிகளுக்கு சின்னம் வழங்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்றே தெரிகிறது.

தேர்தல் ஆணையம் தேர்தலை எப்படி நடத்துகிறது என்பது போகபோகத் தெரியும். ஆனால் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாகவே உள்ளனர்.

இவ்வாறு பொன்முடி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x