Published : 24 Mar 2019 09:44 AM
Last Updated : 24 Mar 2019 09:44 AM

அதிமுகவில் `களைகட்டுது தேர்தல் களம்: ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4 தொகுதிக்கு வேட்பாளர்களாக தேர்வு

நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் ஈரோடு மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் மணிமாறனும், திருப்பூர் தொகுதியில் எம்.எஸ்.எம். ஆனந்தனும், பொள்ளாச்சி தொகுதியில் மகேந்திரனும், நீலகிரி தொகுதியில் தியாகராஜனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகள் ஈரோடு மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று தொகுதிகளைத் தவிர்த்து திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியைச் சேர்ந்த மணிமாறன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொகுதியின் தலை நகராக உள்ள ஈரோட்டில் இருந்து விருப்ப மனு கொடுத்த அதிமுக நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

திருப்பூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை திருப்பூரில் இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டும் உள்ளன. பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர் என நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்பாளராக விரும்பிய அதிமுக நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி (தனி) மக்களவைத் தொகு தியைப் பொறுத்தவரை ஊட்டி,குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் மேட்டுப்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி கோவை மாவட்டத் திலும், பவானிசாகர் தொகுதிஈரோடு மாவட்டத்திலும், அவிநாசி தொகுதி திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது.

இந்த தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் தியாகராஜனும், திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்தவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டுமல் லாது, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள தற்போதைய எம்பி சி.மகேந்திரனும், திருப்பூர் மாவட்டம் மூங்கில் தொழுவினைச் சேர்ந்தவராவர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

6 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மக்களவைத் தொகுதியில் அறிமுகமான வேட்பாளர் என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. அனைத்து தொகுதிக்கும் தெரிந்த முகமாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் தொகுதியின் தலைநகரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத வேட்பாளரை வெற்றி பெற வைக்கும்போது, அனைத்து தேவைகளுக்கும் அவரைத் தேடி செல்ல வேண் டிய நிலை கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்படும்.

கட்சித்தலைமை ஜெயலலிதாவிடம் இருந்தபோது, வேட்பாளர் அறிவிப் பிற்குப் பின்னர் ஏதேனும் சிக்கல், குழப்பம் இருப்பின், தயங்காமல் வேட்பாளரை மாற்று வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். கட்சிக்காக நீண்டகாலம் உழைத்த மூத்த நிர்வாகிகள் தங்கள் உரிமை பறிக்கப்பட்டதாக அதிருப்தியில் உள்ளனர், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x