Published : 22 Mar 2019 06:17 AM
Last Updated : 22 Mar 2019 06:17 AM

கொள்கை பிடிப்போடு திமுக கூட்டணிக்கு ஆதரவு: மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தகவல்

மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணி தொகுதி ஒதுக் காதபோதிலும், கொள்கைப் பிடிப்போடு அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்று அக்கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித் துள்ளார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு ஜவாஹிருல்லா அளித்த சிறப்பு பேட்டி:

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட உங்கள் கட்சிக்கு தொகுதி கேட்டீர்களா?

நாங்கள் ஒரு தொகுதி கேட்டோம். ஆனால், அதற்கான சூழல் ஏற்படவில்லை.

அதிமுக கூட்டணியிலும் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறதே?

நாங்கள் யாருடனும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இது வதந்தி. கொள்கை அடிப்படையில் எங்கள் கட்சி இயங்கி வருகிறது. தொகுதிக்காக கூட்டணியை தேடு பவர்கள் அல்ல. அதேநேரம், சிலர் எங்களை அணுகியதும் உண்மை.

அதிமுக அணுகியதா?

ஆம். அதிமுக அணுகியது.

ஆனாலும், திமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பது ஏன்?

திமுக எங்களுக்கு தொகுதி ஒதுக்காதது, தொண்டர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த 9-ம் தேதி நடந்த எங்கள் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கொள்கைப் பிடிப்போடு திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, இணைந்துள்ளோம்.

பாஜகவை நீங்கள் எதிர்ப்பது ஏன்?

கடந்த தேர்தலில் பாஜக ஏராள மான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அவற்றை நிறைவேற்ற வில்லை. பண மதிப்பிழப்பு நட வடிக்கையால் மக்கள் துன்பப் பட்டார்களே தவிர, நாட்டின் முன் னேற்றத்துக்கு எந்தப் பயனும் ஏற் படவில்லை.

தற்போதைய பிரதமர் மோடி ஆட்சியையும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியையும் எப்படி பார்க்கிறீர்கள்?

முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் நல்லவர் என்று கூறமாட்டேன். அவரது ஆட்சியில் தனிப் பெரும் பான்மை இல்லாமல், கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால், அவர் களால் முழுமையாக செயல்பட முடியவில்லை. தற்போதுள்ள பாஜகவின் ஆட்சியில் இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாச்சாரம் சிதைக்கப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவு அதிகரித்து வருகிறதா?

இந்தியாவில் வாழும் சிறு பான்மை முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் பிரதமர் மோடியை ஏற்றுக் கொள்ளவில்லை. சுயநலம், விளம் பரத்துக்காக சிலர் மோடியை சந்தித்திருக்கலாம், ஆதரவு தெரி வித்திருக்கலாம். ஆனால், பெரும் பாலான சிறுபான்மை மக்கள் மோடியை ஏற்றுக்கொள்ள வில்லை.

தமிழகத்தில் வாரிசு அரசியல் அதிகரிப்பது குறித்து..?

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இது அந்தந்த கட்சிகள் எடுக்க வேண்டிய முடிவு.

‘எங்கள் ஆட்சியில் மதக் கலவரம் ஏற்படவில்லை, நாடு அமைதியாக இருக்கிறது’ என்று பாஜக பிரச்சாரம் செய்கிறதே?

இது தவறான பிரச்சாரம். குஜ ராத்தில் நடந்தது போன்ற கல வரம் நடக்காமல் இருந்திருக்க லாம். ஆனால், கும்பல் வன்முறை கள் பல்வேறு மாநிலங்களில் நடந் துள்ளன. பல்வேறு சம்பவங்கள் வெளியே வரவில்லை. சிறு பான்மை மக்கள் மீதான வன்முறை நடந்துகொண்டு இருக்கிறது.

பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என சமீபத்தில் கருத்து கணிப்புகள் வருகிறதே?

இவை கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள்.

காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், மாநில கட்சிகளும் இந்த தேர்தலை சந்திக்க உள்ளன. உண் மைகளை பேசி மக்களை கவரும் இளம் தலைவராக ராகுல்காந்தி உள்ளார். அவரை மக்கள் அங்கீகரிப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x