Published : 23 Mar 2019 08:17 AM
Last Updated : 23 Mar 2019 08:17 AM

மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு ஏப்ரல் 16-ம் தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யலாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் 

ஏப்ரல் 16-ம் தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரச் சாரம் செய்யலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக் கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகளின் வேட்பாளர் கள், தற்போது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதற் கிடையில், தேர்தல் விதி மீறல்களும் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடத்தை விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நேற்று (21-ம் தேதி) மட்டும் ரூ.5 கோடியே 21 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை ரூ.19 கோடியே 11 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 980 கைத்துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்ப டைக்கப்பட்டுள்ளன.

657 புகார்கள்

சிவிஜில் செயலி மூலம் இதுவரை தமிழகத்தில் 657 புகார் கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 77 ஆயிரத்து 977 அரசு கட்டிடங்களின் சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள், பிரச் சார விளம்பர தட்டிகள், பேனர்கள் அகற்றப்பட்டு, 233 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது.

தனியார் சுவர்களில் வரையப் பட்ட 1 லட்சத்து 43 ஆயிரத்து 930 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, 148 புகார்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட விளம்பரத்துக்கான செலவு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

ரூ.50 ஆயிரம் வரை

பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கமாக பணத்தைக் கொண்டு சென்றால் ஆவணங் களை வைத்திருக்க வேண்டிய தில்லை. அதற்கு மேல் எடுத்துச் செல்லும் போது, அந்த பணம் எந்த வகையில் கிடைத்தது என்பதற்கான ஆவணம், அதாவது, ஏடிஎம் சீட்டு, வங்கி காசோலை விவரம், வங்கியில் பணம் எடுத்ததற்கான விவரங்களை கொண்டு செல்ல வேண்டும்.

மதுரையில் அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து ஏப்ரல் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரச் சாரத்தை வேட்பாளர்கள் முடிக்க வேண்டும். மதுரையில் மட்டும் மாலை 8 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x