Published : 26 Mar 2019 01:11 PM
Last Updated : 26 Mar 2019 01:11 PM
சிவாஜி பாடலை எம்ஜிஆர் பாடல் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக கூட்டணி கட்சிகளின் திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, விஜயகாந்துக்கு பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எம்ஜிஆர் பாடலை தான் விஜயகாந்த் விரும்பி பாடுவார் என குறிப்பிட்ட பிரேமலதா, அதற்கு உதாரணமாக நடிகர் சிவாஜி கணேசனின் 'ஒளிமயமான எதிர்காலம்' என்ற பாடலை குறிப்பிட்டார். இதனால், மேடையில் இருந்தவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:
"கேப்டனுக்கு தற்போது ஸ்பீச் தெரபி அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது, ஏதாவது பாடலை பாடுமாறு மருத்துவர்கள் கூறுவர். அப்போது, எம்ஜிஆர் பாடலை மட்டுமே அவர் பாடுவார். கேப்டன் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் எவ்வளவு இருந்தாலும், அவர் விரும்பி பாடுவது எம்ஜிஆர் பாடல்களைத் தான். அதில், அவர் அதிகம் விரும்பி பாடுவது, 'ஒளிமயமான எதிர்காலம்' என்ற பாடல் தான். அந்தளவுக்கு எம்ஜிஆரை நேசித்தவர்"
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT