Published : 12 Mar 2019 11:37 AM
Last Updated : 12 Mar 2019 11:37 AM

தென் மாவட்ட 10 தொகுதிகளில் 1-ல் மட்டுமே திமுக போட்டி? - அதிமுகவுடன் நேருக்கு நேரான மோதல் தவிர்ப்பு

மதுரை உட்பட தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் திமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடவும், மற்றவைகளை கூட்டணிக்கு ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளது. அதிமுகவுடன் நேருக்கு நேராக மோதுவதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு என்றாலும் அதிமுகவுக்கு நல்ல வாய்ப்பாக போய்விடக்கூடாது என திமுகவினர் ஆதங் கப்படுகின்றனர்.

தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக் கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மக்க ளவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கன்னி யாகுமரியைத் தவிர மற்ற 9 தொகுதி களிலும் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வென் றது. தேனியில் 3.14 லட்சம், சிவகங்கையில் 2.25 லட்சம், மதுரையில் 1.97 லட்சம் என அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் மற்ற தொகுதிகளில் 1.24 லட்சத்துக்கும் மேல் கூடுதல் வாக்குகளைப் பெற்று அதிமுக வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது. இந்த மாவட்டங்களில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் அதிமுக தென் மாவட்ட தொகுதிகளையே அதிகம் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகக் கட்சியினர் தெரி விக்கின்றனர்.

இது குறித்து திமுகவினர் கூறியது: கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருது நகர், சிவகங்கை, தேனி ஆகிய தொகு திகள் காங்கிரஸ் கட்சிக்கும், மதுரை மார்க்சிஸ்ட்டுக்கும், தென்காசி இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும், ராமநாதபுரம் முஸ்லிம் லீக்குக்கும் ஒதுக்கப்படவுள்ளன.

திண்டுக்கல் தொகுதியில் திமுக போட்டியிட விரும்பியது. தற்போது அங்கும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அந்தத் தொகுதியையும் காங்கிரஸுக்கே ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது. இதனால் தற்போதைய சூழலில் தென் மாவட்டங்களிலுள்ள 10 தொகுதிகளில் தூத்துக்குடியில் மட்டுமே திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதர 9 தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்கே திமுக விட்டுக்கொடுக்கிறது. இது தென் மாவட்ட திமுகவினரை சோர்வடையச் செய்யும்.

இதை அதிமுக சாதகமாக எடுத்துக்கொண்டு, எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என தேர்தல் பணியாற்றும். இதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் திமுக.வின் செயல்பாடு அமைந்துவிடக் கூடாது. கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் செல்வாக்குடன் உள்ளது. மற்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம். அங்கு திமுக எதிர்த்து நின்றால்தான் கடும் போட்டியைக் கொடுத்து வெற்றிக்கு வழிகாண முடியும். தைரியத்துடன் எதிர்கொண்டு அதிமுக வெற்றியைத் தடுப்பதை விடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி தப்பிக்கப் பார்க்கும் போக்கில் தலைமை செயல்படுகிறது.

அதிமுக கூட்டணியில், கன்னியாகுமரி, தூத்துக்குடியை பாஜகவுக்கும், விருதுநகரை தேமுதிகவுக்கும், திண்டுக்கல்லை பாமகவுக்கும் ஒதுக்கிவிட்டு மற்ற 6 தொகுதிகளில் அதிமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை 4 இடங்களிலும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை தலா 1- இடங்களிலும் எதிர்த்துப் போட்டியிடும் சூழல் உள்ளது. இதில் 6 தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக வியூகம் வகுக்கிறது. இதனால் ஏற்படும் இழப்பு திமுகவுக்கு இல்லாவிட்டாலும் கூட்டணியைக் கடுமையாகப் பாதிக்கும். இதை தடுக்கும் வழியை திமுக தலைமை தேட வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x