Published : 25 Mar 2019 06:54 AM
Last Updated : 25 Mar 2019 06:54 AM

‘ஜக்கு ஜக்கு’ன்னு சொல்லுங்க!- சிரிப்பலை ஏற்படுத்திய ரங்கசாமி

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கு புதுச்சேரி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி வேட்பாளராக டாக்டர் கே.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காரைக்காலில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை, அக்கட்சியின் நிறுவனர் தலைவரும், புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான என்.ரங்கசாமி அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அவர் கூறியதாவது:

எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கப்போவதில்லை. அதனால், ‘சிவனே’ என்று இருக்கிறோம். ஆனால், எங்கள் மீதும் குற்றம்சாட்டுகின்றனர்.

தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

நீங்கள் வாக்கு சேகரிக்கும்போது, வெறுமனே ‘நாராயணசாமி.. நாராயணசாமி..’ என்று பெயரை மட்டும் சொல்லி வாக்கு கேட்கக் கூடாது. ஏனெனில், அவர் (புதுச்சேரி முதல்வர்) பெயரும் நாராயணசாமிதான். எனவே, குழப்பம் வந்துவிடும்.

‘ஜக்கு.. ஜக்கு..’ (Jug) என்று நமது சின்னத்தையும் சேர்த்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x