Last Updated : 27 Mar, 2019 07:30 AM

Published : 27 Mar 2019 07:30 AM
Last Updated : 27 Mar 2019 07:30 AM

கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுவதால் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது- தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உற்சாகம்

அதிமுக கூட்டணியில் நிலவிவந்த மனக்கசப்புகள் மாயமாகிவிட்டன. தற்போது கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கட்சி வேறுபாடின்றி இணைந்து பணியாற்றுவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள் ளது என்று தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் அவர், தீவிர வாக்கு சேகரிப்புக்கு இடையில், ‘இந்து தமிழ்’ நாளித ழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

2014 மக்களவைத் தேர்தலில் சேலத்தில் கூட்டணி சார்பில் போட்டியிட்டேன். அதற்கு முன்பு 2009 மக்களவைத் தேர்தலில் கள் ளக்குறிச்சியில் தனித்துப் போட்டி யிட்டேன். வெற்றி வாய்ப்பை இழந்தாலும் 1.40 லட்சம் வாக்குகள் பெற்றேன். தற்போதுள்ள மெகா கூட்டணியில் வெற்றிக்கான நம் பிக்கை அதிகரித்துள்ளது. எங்கள் கட்சியினரோடு, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தொண் டர்களும் இணைந்து கட்சி வேறு பாடின்றி களப்பணியாற்றுவதை பார்க்கும்போது, வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதை உணர்கிறேன்.

கள்ளக்குறிச்சியை மீண்டும் தேர்வு செய்தது ஏன்?

இந்த தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்துறைப்பட்டு கிராமம்தான் என் சொந்த ஊர். எனது தந்தை இதே பகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில்தான் வேலை செய்தார். சொந்த தொகுதி, பரிச்ச யமான தொகுதி என்பதால் மீண்டும் போட்டியிடுகிறேன்.

உங்களுக்கு அதிமுக, பாமகவினரின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு உள்ளது?

கூட்டணியில் நிலவிவந்த மனக்கசப்புகள் எல்லாம் மாயமா கிவிட்டன. முதல்வர் தனது பிரச் சாரத்தையே, நான் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட் பட்ட கருமந்துறையில்தான் தொடங்கினார். பாமக நிறுவனர் ராமதாஸ், விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

உங்கள் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்ததால்தான் சீட் எண் ணிக்கை குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

அது முற்றிலும் தவறு. 2006 சட்டப்பேரவை தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 8.6 சதவீதமும், 2009 மக்களவைத் தேர்தலில் 10.3 சதவீதமும் வாக்குகள் பெற்றோம். கூட்டணி என்பதால், குறைவான தொகுதிகளில் போட்டியிடுகி றோம். அந்த அடிப்படையில் எங் கள் வாக்குகளை கணக்கிடக் கூடாது. தேமுதிகவின் வாக்கு சதவீதம் கடந்த காலங்களைவிட அதிகரித்திருப்பதே உண்மை.

தமிழகத்தையும் தாண்டி உங்கள் கட்சி வளர்ச்சி பெற்றுள்ளதா?

ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களிலும் எங்கள் கட்சி செயல்படுகிறது. வருங்காலத் தில் மற்ற மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம்.

சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், பிரச்சாரத்துக்கு வருவாரா?

விஜயகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். பிரச்சாரத்துக்கு கட்டா யம் வருவார். எப்போது என்பதை விரைவில் அறிவிப்போம். பொரு ளாளர் பிரேமலதாவும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவரது மகன் விஜய பிரபாகரனும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வார்.

தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியிடாதது ஏன்?

மக்களிடம் பொய்யான வாக்கு றுதிகளை அளிக்க விரும்ப வில்லை. வெற்றி பெற்றால் அந் தந்த பகுதி மக்களுக்கு என்ன தேவையோ, அவற்றை செய் வோம். நல்ல திட்டங்களை வரிசைப் படுத்தி வைத்துள்ளோம். அந்தந்த தொகுதியின் சூழலுக்கேற்ப அவற்றை செயல்படுத்துவோம்.

நீங்கள் வென்றால், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்வீர்கள்?

இப்பகுதி விவசாயப் பொருட் களை மதிப்பு கூட்டுவது, ஏற்றுமதி தொழிலை ஊக்கப்படுத்தும் வித மாக விவசாயம் சார்ந்த வர்த்தக தொழில் மையம் அமைப்பது, அரிசி ஆலை, மரவள்ளிக் கிழங்கு ஆலை களை நவீனப்படுத்தி, தொழிலை மேம்படுத்துவது, மலைவாழ் மக்க ளுக்கு நிரந்தர வருவாய் ஏற் படுத்தி தருவது போன்ற திட்டங் களை செயல்படுத்துவேன்.

மீண்டும் பாஜக ஆட்சி அமைந் தால், அமைச்சரவையில் உங்க ளுக்கு இடம் வழங்கப்படுமா?

இது தேர்தல் வெற்றிக்குப் பிறகு முடிவு செய்ய வேண்டிய விஷயம்.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x