Published : 06 Mar 2019 09:09 am

Updated : 06 Mar 2019 09:09 am

 

Published : 06 Mar 2019 09:09 AM
Last Updated : 06 Mar 2019 09:09 AM

ஒடிசாவில் பிரச்சாரம் தொடங்கினார் நவீன் பட்நாயக்

ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமது பிஜுஜனதா தளக் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமானநவீன் பட்நாயக் நேற்று தொடங்கினார்.

நிகழாண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. எனவே, அம்மாநிலத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


அந்த வகையில், ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள பிஜு ஜனதா தளம் தமது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கியது. குர்தா மாவட்டத்தில் உள்ள கண்டிலா கிராமத்தில் இந்தப் பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x