Last Updated : 16 Mar, 2019 09:51 AM

 

Published : 16 Mar 2019 09:51 AM
Last Updated : 16 Mar 2019 09:51 AM

தலித்துகளுக்கு எதிரானவர் மோடி- பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆவேசம்

தலித்துகளுக்கு எதிரானவர் பிரதமர் மோடி; அவரை அதிகாரத்திலிருந்து மக்கள் தூக்கியெறிய வேண்டும் என்று பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆவேசமாகப் பேசினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பீம் ஆர்மி அமைப்பு போட்டியிடவுள்ளது. இந்நிலையில் பீம் ஆர்மி அமைப்பின் பேரணி, பொதுக்கூட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேசியதாவது:நான் வரும் மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் போட்டியிடப் போகிறேன். அங்கு மக்களின் ஆதரவு எனக்குத் தேவை. அப்போதுதான் பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிக்க முடியும்.

பிரதமர் மோடி, தலித் மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவரைப் பதவி, அதிகாரத்திலிருந்து மக்கள் தூக்கியெறியவேண்டும்.

தலித் மக்களின் எதிரியான அவர் தண்டிக்கப்படவேண்டும். ஜனநாயகத்தில் மக்கள்தான் முக்கியம் என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ளவேண்டும்.

வாரணாசியிலிருந்து போட்டியிடப் போகிறேன் என்று நான் அறிவித்ததுமே, கும்பமேளாவில் பணிபுரிந்த துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களை பிரதமர் மோடி சுத்தம் செய்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தியாகத்தை மக்கள் வாக்களிக்கச் செல்லும் முன்பு நினைத்துப் பார்க்கவேண்டும். தேர்தலில் நீங்கள் (மோடி) எளிதில் வெற்றி பெற நான் விடமாட்டேன்.

நான் அரசியல்வாதியாக இருக்க விரும்பவில்லை. சாமானிய மக்களின் மகனாக போட்டியிட விரும்புகிறேன். உங்களை (மோடி) மீண்டும் குஜராத்துக்கே திரும்பச் செய்வதற்கு யாராவது ஒருவர் தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x