Published : 26 Mar 2019 05:05 AM
Last Updated : 26 Mar 2019 05:05 AM

நிஜாமாபாத் மக்களவைத் தொகுதிக்கு 160-க்கும் மேற்பட்டோர் மனு: ஆந்திரா, தெலங்கானாவில் மனு தாக்கல் நிறைவு; தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியில்லை

ஆந்திரா, தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவுற்றது. இதில், தெலங் கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 160-க் கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோன்று ஏப்ரல் 11-ல் தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. மேலும், புதிய கட்சியான ஜனசேனா கட்சியும் சில தொகுதிகளில் இவ்விரு கட்சிகளுக்கும் பலத்த போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை இக்கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் முன்னுக் குப்பின் முரணாக இருப் பதாகக் கூறி, கூட்டணிக்கு அளித்து வந்த தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டு இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. ஆந்திராவில் உள்ள வேட்பாளர்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், நடிகை ரோஜா, என்.டி.ஆரின் மகள் புரந்தேஸ்வரி, பாலகிருஷ்ணா, நடிகர் நாகபாபு, சிவப்பிரசாத், முரளிமோகன், லட்சுமி நாராயணா ஐ.ஏ.எஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இதேபோன்று தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி ஆகியோர் மனு தாக்கல் செய்துள் ளனர். நிஜாமாபாத் மக்களவைத் தொகு திக்கு மட்டும் 160-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற வுள்ளது. 28-ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம்.

முதன்முறையாக தெலங் கானாவில் உள்ள 17 மக்கள வைத் தொகுதிகளில் இம் முறை ஒன்றில்கூட தெலுங்கு தேசம் கட்சி தனது வேட் பாளர்களை நிறுத்தவில்லை. இதனால், அங்கு ஆளும் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x