

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி இந்த முறை விஐபி தொகுதிப் பட்டியலில் இணைந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் தேமுதிகவின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் திமுக சார்பில் பொன்முடியின் மூத்த வாரிசு கவுதம சிகாமணியும் களமிறக்கப்பட்டுள்ளதுதான்.
கள்ளக்குறிச்சையைத் தலைமையிடமாகக் கொண்டு புது மாவட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால், தொகுதி அதிமுகவுக்குச் சாதகமாக இருக்கும் என்பதாலும், ஏற்கெனவே இதே தொகுதியில் தனித்து நின்றபோது 1.40 லட்சம் வாங்கியதால், இந்த முறை அதிமுக, பாமக துணையோடு எளிதில் வெற்றி பெறலாம் என கணக்கிட்டு அமர்க்களமாக களமிறங்கிய சுதீஷூக்கு, தற்போது அதிமுகவினரின் ஒரு தரப்பினர் அமைதியாகியிருப்பது அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன், பொருளை வாங்கும் சக்தி படைத்த தெய்வசிகாமணி என்ற பொன்முடி, அவர்களை விலைக்கு வாங்கி விட்டார் என்ற தகவலறிந்த சுதீஷ், முதல்வரிடம் முறையிட, அவரோ தேர்தல் பொறுப்பாளராக ஆத்தூரைச் சேர்ந்த இளங்கோவனை, சுதீஷூக்கு பணியாற்றக் களமிறக்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தனி மாவட்ட அறிவிப்பு, பொன்முடியின் மீதான அதிருப்தி ஆகியவற்றைக் கொண்டு பிரச்சாரம் செய்தபோதிலும், மோடியின் மீதான எதிர்ப்பு அலை, மாநில ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு மேலோங்கியிருப்பதால் கவுதம சிகாமணி கவுரவமாக தொகுதிக்குள் வலம் வருகிறார்.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். தேமுதிக சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் களம் காண்கிறார். கருத்துக் கணிப்பின்படி கௌதம சிகாமணி முதலிடம் வகிக்கிறார். இரண்டாம் இடத்தில் எல்.கே.சுதீஷ் உள்ளார். அமமுக வேட்பாளர் கோமுகி மணியன் 3-ம் இடத்தில் உள்ளார்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: