Published : 03 Mar 2014 08:31 PM
Last Updated : 03 Mar 2014 08:31 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - எழும்பூர்(தனி)

2011 சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர்(தனி)

வென்றவர்: கே. நல்லதம்பி (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 51772

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பரிதி இளம்வழுதி (திமுக)

பெற்ற வாக்குகள்: 51570

தி மு கவின் கோட்டை என்றழைக்கப்பட்ட தொகுதி எழும்பூர். கடந்த இரு சட்டமன்ற தேர்தலிலும் கடும் போட்டி. சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி என்பதே நிலைமை.

2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆதரவு பெற்ற ஜான் பாண்டியனிடம் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி, கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தே தி முகவின் கு. நல்லதம்பி தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர்.

ஏராளமான குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள் கொண்ட எழும்பூர் தொகுதியின் சுகாதர நிலமை பெரும் சோகம். குப்பை கூளங்கள் சரிவர அகற்றப் படாமல் கொசு பண்ணைகளாக மாறியுள்ளது பல பகுதிகள்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள், அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகள் , வழிந்தோடும் கழிவு நீர் என்று மக்கள் அதிருப்தி பலமாக இருக்கிறது. ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம், அருகாமையில் பள்ளி கல்லூரிகள், குடிநீர் விநியோகம், அரசு மருத்துவ வசதிகள் ஆகியவை மக்களின் திருப்தியை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x