Last Updated : 01 Apr, 2019 01:02 PM

 

Published : 01 Apr 2019 01:02 PM
Last Updated : 01 Apr 2019 01:02 PM

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

1977-ம் ஆண்டு முதல் ரிசர்வ் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாறியுள்ளது. விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் நடக்கும் பகுதி. குறிப்பாக தென்னை விவசாயம், அது சார்ந்த தேங்காய், தேங்காய் நார் தொழில் அதிகமாக நடக்கிறது. கேரள மாநில எல்லையொட்டிய தொகுதி என்பதால் அதன் தாக்கம் உண்டு.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதி சற்று மாறுதல் அடைந்துள்ளது. கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியும் இணைந்துள்ளதால், கோவை பகுதியின் அரசியல், சமூக சூழல் தாக்கம் கொண்ட தொகுதியாக உள்ளது.

திராவிட கட்சிகளே தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ள தொகுதி இது. மதிமுகவுக்கும் ஒட்டு வங்கி இருந்ததால் இரண்டுமுறை அக்கட்சியின் சார்பில் கிருஷ்ணன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த தேர்தலில் அதிமுகவின் மகேந்திரன் ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் 2வது இடம் பிடித்தார்.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

 

பொள்ளாச்சி

கிணத்துக்கடவு

மடத்துக்குளம்

உடுமைலப்பேட்டை

தொண்டாமுத்தூர்

வால்பாறை (எஸ்சி)

 

தற்போதைய எம்.பி

மகேந்திரன், அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

 

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுகமகேந்திரன்417092
பாஜகஈஸ்வரன்276118
திமுகபொங்கலூர் பழனிசாமி251829
காங்கிரஸ்செல்வராஜ்30014

 

முந்தைய தேர்தல்கள்

 

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1971நாராயணன், திமுகநல்லசிவம், ஸ்தாபன காங்
1971 (இடைத்தேர்தல்)கலிங்கராயர், திமுகஆர்.கே.கவுண்டர், சுயேச்சை
1977ராஜூ, அதிமுகதண்டபாணி, திமுக
1980தண்டபாணி, திமுகநடராஜன், அதிமுக
1984அண்ணாநம்பி, அதிமுககிருஷ்ணசாமி, திமுக
1989ராஜா ரவி வர்மா, அதிமுகஆறுமுகம், சிபிஐ
1991ராஜா ரவி வர்மா, அதிமுகதண்டபாணி, திமுக
1996கந்தசாமி, தமாகா,அண்ணா நம்பி, அதிமுக
1998தியாகராஜன் அதிமுககோவை தங்கம், தமாகா
1999கிருஷ்ணன், மதிமுகதியாகராஜன், அதிமுக
2004கிருஷ்ணன், மதிமுகமுருகன், அதிமுக
2009சுகுமார், அதிமுகசண்முகசுந்தரம், திமுக

 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

 

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக

கிணத்துக்கடவு : சண்முகம், அதிமுக

மடத்துக்குளம் : ஜெயராமகிருஷ்ணன், திமுக

உடுமைலப்பேட்டை : ராதாகிருஷ்ணன், அதிமுக

தொண்டாமுத்தூர் : எஸ்.பி. வேலுமணி, அதிமுக

வால்பாறை (எஸ்சி) : கஸ்தூரி வாசு, அதிமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 

சி. மகேந்திரன் (அதிமுக)

கு. சண்முக சுந்தரம் (திமுக)

முத்துக்குமார் (அமமுக)

மூகாம்பிகை (மநீம)

சனுஜா (நாம் தமிழர்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x