Last Updated : 06 Apr, 2019 12:00 AM

 

Published : 06 Apr 2019 12:00 AM
Last Updated : 06 Apr 2019 12:00 AM

ஆளுமை வேட்பாளர்களால் தேனி வரும் டெல்லி தலைவர்கள்: பரபரப்பில் தேர்தல் களம்

தேனி தொகுதி வேட்பாளர்கள் டெல்லி வரை இணக்கமான தொடர் பில் இருப்பதால் பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இத்தொகுதி பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளனர். டெல்லி தலைவர்களை நேரில் பார்த்திராத புதிய தலைமுறையினருக்கு இவர்களின் வருகை ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி தொகுதிக்கு ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதுமே மாநில அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் வேட்பாளர்களின் பின்னணிதான். அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், அமமுக சார்பில் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமி ழ்ச்செல்வன், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் போட்டி யிடுகின்றனர். மும்முனைப் போட்டி அதிலும் மூன்று கட்சிகளிலும் பிரபல வேட்பாளர்கள் என்பதால் மற்ற தொகுதிகளைவிட தேனி கூர்நோக்கிய கவனத்துக்கு உள்ளானது.

தொகுதி ஒதுக்கீட்டி ன்போது ஒவ்வொரு கட்சிகளும் ஆதரவு, எதிர்ப்பு வாக்குகளைக் கணக்கிட்டு களம் காண இருந் தது. ஆனால் வேட்பாளர்கள் அறிவிப்புக்குப் பிறகு இந்த கணி ப்புகள் அனைத்தும் மாறி விட்டன. காரணம் கட்சிகளைக் கடந்து வேட்பாளர்களின் பின்னணி, தனித்திறன் மேலோங்கி இருந்த துதான். இதனால் வாக்குகள் பிரிவதற்கான சூழ்நிலைகள் அதிக மாயின. சாதிப் பின்னணி, பிரபல முகம், அரசியல் அனுபவம், செயல்பாடு என்று வாக்காளர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டது.

இதனால் மூன்று கட்சிகளுமே கடுமையான பிரசாரத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன.

அதிமுக பிரச்சாரத்தில் ஏரா ளமான பேச்சாளர்களையும், சினிமா பிரபலங்களையும் ஈடு படுத்தியது. இதன் உச்சமாக பிரச் சாரத்துக்காக பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி தேனி வருகிறார்.

பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் தென்மாவட்டங்களில் போட்டியிட.. அத்தொகுதிகளை எல்லாம் தவிர்த்து விட்டு தேனி பிரசாரத்துக்கு மோடி வருகிறார். இது துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் டெல்லி தொடர்பையே காட்டுகிறது. இது குறித்து பாஜ கவினரே ஆச்சரியத்தில் ஆழ்ந் துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தரப்பிலும் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வரும் 12-ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரத்துக்காக தேனி வருகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவனைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமை வரை நல்ல நெருக்கம் உண்டு. அந்த பழக்கத்தில் ராகுல் தேனி வர பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

பொதுவாக டெல்லி தலைவர்கள் பலரும் தேனி போன்ற பகுதிகளுக்கு அதிகம் வந்ததில்லை. குறிப்பாக இத்தொகுதி தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டதில்லை. போடி கல்லூரி விழாவுக்கு 1990-ல் வந்த ராஜீவ் காந்தி தேனி பங்களாமேட்டில் இருந்து நேரு சிலை வரை நடந்தே சென்றதை கட்சியின் மூத்த நிர்வாகிகள் நினைவு கூர்கின்றனர்.

இந்திராகாந்திக்குப் பிறகு மொரார்ஜிதேசாய், சரண்சிங், ராஜீவ்காந்திக்குப் பிறகு விபி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா, ஐகே.குஜ்ரால், மன்மோகன்சிங் என்று பலர் பிரதமராக இருந்தும் தேனி பகுதி மக்கள் இவர்களை ஊடகங்களிலே பார்க்கும் நிலை இருந்தது. தற்போது இத்தொகுதி வேட்பாளர்கள் டெல்லி வரை இணக்கமான தொடர்புகளை வைத்திருப்பதால் பிரதமரையும், பிரதமர் பதவிக்கான வேட்பாளரையும் இங்கு அழைத்து வரக்கூடிய அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளனர்.

பிரபல வேட்பாளர்கள் இங்கு ஏற்கெனவே போட்டியிடும் நிலையில் தற்போது கட்சியின் உயர்நிலைத் தலைவர்களும் இத்தொகுதிக்கு வர உள்ளதால் தேசிய அளவிலான பார்வையை தேனி தொகுதி பெற்றுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x