Published : 24 Mar 2019 10:03 AM
Last Updated : 24 Mar 2019 10:03 AM

அதிருப்தியாளர்களை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சரிகட்டுவாரா?

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகர ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ வாங்கிக் கொடுக்காமல் கட்சிக்குள் தனக்கு எதிராக அரசியல் செய்த புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மகன் ராஜ் சத்யனுக்கு‘சீட்’ வாங்கிக் கொடுத்ததால் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் பெரியளவில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

மதுரை அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் கே.ராஜூ. இவருக்கும், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரான விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏவுக்கும் ஒருபோதும் ஆகாது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் ‘சீட்’ வழங்கும்போது சமுதாய ரீதியாக இவர்கள் ஒன்றாகிவிடுவார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனுக்கு கட்சித் தலைமையிடம் சிபாரிசு செய்து ‘சீட்’ வாங்கிக் கொடுத்தார்.

அதனால், அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேர்தல் பணிகளில் ஆர்வமில்லாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே மாநகர அதிமுகவில் டிடிவி.தினகரன் ஆதரவு வட்ட நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்கள் ஆட்சி பறிபோனால் அடுத்த நிமிடமே அமமுக பக்கம் செல்லத் தயாராக உள்ளனர். தற்போது இவர்கள் அதிமுக முகாமில் இருந்து கொண்டே அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரைக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து மாநகர அதிமுவினர் கூறியதாவது:

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிற்க முயன்ற ராஜன்செல்லப்பாவுக்கு கட்சித் தலைமை ‘சீட்’ மறுத்தது. கடைசி நேரத்தில் திடீரென்று வடக்குத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பாண்டியனை மாற்றிவிட்டு, ராஜன்செல்லப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதி மாநகர அதிமுக கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், இந்த தொகுதியில் ராஜன்செல்லப்பாவுக்கு ‘சீட்’ கிடைத்த பின்னணியில் சசிகலா குடும்பத்தினரும், அதற்கு மாநகரச் செயலாளர் என்ற அடிப்படையில் சம்மதம் தெரிவித்த செல்லூர் கே.ராஜூவும் இருந்தனர்.

ராஜன்செல்லப்பா வெற்றி பெற்றாலும் அவரால் அமைச்சராக முடியவில்லை. அதே நேரம், செல்லூர் கே.ராஜூ அமைச்சரானார். திருமங்கலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.பி.உதயகுமாரும் அமைச்சரானார். அதனால், தன்னுடைய அமைச்சர் கனவை மகனைக் கொண்டு நிறைவேற்ற, மதுரை மக்களவைத் தொகுதிக்கு  போராடி ‘சீட்’ வாங்கிக் கொடுத்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து மகனும் வெற்றி பெற்றால் அவரை மத்திய அமைச்சராக்க ராஜன்செல்லப்பா திட்டமிட்டுள்ளார்.

 மாநகர அதிமுகவில் கிரம்மர் சுரேஷ், எம்.எஸ்.பாண்டியன், ஆவின் முன்னாள் சேர்மன் தங்கம், மாவட்ட பொருளாளர் ராஜா, சோலைராஜா உள்ளிட்டவர்கள் செல்லூர் கே.ராஜூவின் முக்கிய ஆதரவாளர்கள். ஆனால், இவர்களில் ஒருவருக்குக்கூட  அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ‘சீட்’ வாங்கிக் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை.  அதனால், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனக்கு அடுத்தபடியாக மாந கர அதிமுகவில் யாரையும் வளர்த்துவிட விருப்பம் இல்லையோ என்ற சந்தேகம் உள்ளது.

பகுதி செயலா ளர்களில் நிறைய  இளைஞர்கள் உள் ளனர்.

அவர்களை இவர் வளர்த்து விட வில்லை. அதனால், அவர்களில் பலர் ஏற்கெனவே டிடிவி.தினகரன் பக்கம் சென்றுவிட்டனர். தற் போது இருக்கிற ஆதர வாளர்களையும் செல்லூர் கே.ராஜூ தக்க வைக்காவிட்டால் மாநகர அதிமு கவில் இளைஞர்கள் பட்டாளம் காலி யாகும் வாய்ப்புள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x