Published : 06 Mar 2019 07:35 AM
Last Updated : 06 Mar 2019 07:35 AM

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்ததாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2, மதிமுகவுக்கு ஒரு தொகுதியுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். 20 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத் தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் முதலாவதாக காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக் கப்பட்டன. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடங்கள் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிகவுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் நேற்று நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும் மதிமுகவுக்கு 1 மக்களவை தொகுதியுடன் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவல கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மக்கள வைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 1 மக்களவைத் தொகுதியும் ஜூன் மாதம் நடக்கவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் 1 இடமும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே நடந்த பேச்சுவார்த்தை யில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பேச்சு வார்த்தையின்போது மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் கணேசமூர்த்தி, துணைப் பொதுச்செயலாளர் கள் மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்' என கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் உடன்பாடு ஏற் பட்ட பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டா லின் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமை யிலான கூட்டணியில் திமுக 20, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய ஜனநாயக கட்சி 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. திமுக 20 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

விருதுநகரில் 6-ம் தேதி (இன்று) நடக்கும் பேரணியில் நான் பங்கேற்கிறேன். எனவே, 7-ம் தேதியில் இருந்து கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழு பேச்சு நடத்தும். மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மக்கள வைத் தொகுதியில் எந்த சின்னத்தில் போட்டி யிடுவது என்பது தொடர்பாக எங்கள் உணர்வை, யோசனையை வைகோவிடம் கூறியுள்ளோம். அதை ஆலோசித்து அவர் கள் முடிவு எடுப்பார்கள்.

மமக-வுக்கு உறுதி

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா என்னைச் சந்தித்துப் பேசினார். ‘இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை. திமுக கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள். வரும் காலங் களில் வாய்ப்பு வரும்போது உங்களை பயன் படுத்திக் கொள்வோம்’ என அவர்களுக்கு உறுதி அளித்துள்ளோம்.

விருதுநகர் பேரணி, பொதுக்கூட்டம் ஏற் கெனவே முடிவு செய்து அறிவிக்கப்பட்டக் கூட்டம். அந்த நாளில் கூட்டணி கட்சித் தலை வர்கள் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் விருதுநகர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங் கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி என்னை சந்தித்து அழைப்பு விடுத்தார். ராகுல் காந்தி தமிழகத்தில் பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

திமுகவுடன் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு குறித்து செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ''திமுக கூட்டணியில் மார்க் சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட் டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் முடிவு செய்யப்படும். 21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் திமுகவுக்கு ஆதரவளிப்போம். தமிழகத்தில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக, பாமக, பாஜக கூட்டணியைத் தோற்கடிப்பதே எங்கள் இலக்கு. எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் மேடைகளிலும் மார்க்சிஸ்ட் பிரச்சாரம் செய்யும்'' என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ‘‘திமுக கூட்டணியில் மதிமுக வுக்கு 1 மக்களவைத் தொகுதி, மாநிலங்கள வையில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகுந்த மகிழ்ச்சியோடும் மனநிறை வோடும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளோம். 21 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு எப்போது இடைத்தேர்தல் நடந்தா லும் திமுகவை ஆதரிப்போம்'' என்றார்.

மதிமுக எந்தச் சின்னத்தில் போட்டி யிடும் என செய்தியாளர்கள் கேட்ட கேள் விக்கு பதிலளிக்க வைகோ மறுத்துவிட் டார். ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘மதிமுக போட்டியிடும் சின்னம் குறித்து மதிமுக ஆலோசித்து முடிவெடுக் கும்' எனக் கூறியிருந்தார். மதிமுக, விசிக கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடுமாறு திமுக வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x