Last Updated : 20 Mar, 2019 09:18 AM

 

Published : 20 Mar 2019 09:18 AM
Last Updated : 20 Mar 2019 09:18 AM

விருதுநகரில் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே காங்கிரஸ் கட்சியில் தொடங்கியது ‘கோஷ்டி பூசல்’

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விருதுநகர் தொகுதியில், வேட்பாளர் அறிவிப் புக்கு முன்பே கட்சிக்குள் கோஷ்டி பூசல் தொடங்கிவிட்டது. இதனால், வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என கேள்வி எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் காங் கிரஸுக்கு விருதுநகர் ஒதுக்கப் பட்டுள்ளது. இங்கு காங்கி ரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூரை பரிந்துரை செய்து மாவட்டச் செயலர்கள் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகாசி முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஞானசேகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு ஒரு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், "2004 தேர்தலில் மாணிக்கம் தாகூர் வெற்றிக்கு அப்போதைய மாவட்டச் செயலர் கணேசன் முழு முயற்சி எடுத்தார். ஆனால், மாணிக்கம் தாகூர் எம்.பி.ஆன இரு ஆண்டுகளிலேயே மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து கணேசனை நீக்கி, வேலாயுதம் என்பவரை மாவட்டத் தலைவராக் கினார். தற்போது வேலாயுதம் அதிமுகவில் இணைந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, கிழக்கு மாவட்டத் தலைவராக ஸ்ரீராஜா சொக்கரையும், மேற்கு மாவட்டத் தலைவராக கட்சிக்கு சம்பந்தமே இல்லாத தளவாய் பாண்டியனையும் நியமி த்துள்ளார்.

மாணிக்கம் தாகூரின் தவறான நடவடிக்கைகளால் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் நகராட் சிகள் கைவிட்டுப் போயின. மூத்த உறுப்பினர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் முன்னணித் தலைவர்கள் கட்சிப் பணியாற்ற முடியாமல் தவிக் கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் கட்சிப் பணி எதையும் மாணிக்கம் தாகூர் செய்யவில்லை. ஆனால், மீண்டும் விருதுநகர் தொகுதியை மாணிக்கம் தாகூர் கேட்பது நியாயமா?" என்று குறிப்பிட்டுள் ளார்.

இக்கடிதத்தால் விருதுநகர் மாவட்ட காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலர்கள் ஸ்ரீராஜா சொக்கர், தளவாய்பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: சிவகாசியைச் சேர்ந்த ஞானசேகரன் தற்போது கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. தொகுதி முழுவதும் உள்ள உறுப்பினர்கள், நிர்வாகிகளைக் கேட்டு ஆலோசனை செய்தே விருதுநகர் தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.மாணிக்கம் தாகூரை மாநிலத் தலைமைக்குப் பரிந்துரைத்து கடந்த 16-ம் தேதி கடிதம் அனுப்பினோம்.

இதற்கு, மாவட்டத் தலைவர் களான எங்களைத் தவிர, மாநில செயற்குழு உறுப்பினர்கள் 9 பேரும், கட்சியின் 5 நகர் தலைவர்களும், 19 ஒன்றியத் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை ஏற்படுத்துவது அதிமுக- பாஜக செய்யும் சதி. பிரச்சினையை ஏற்படுத்தியவர்கள் ஆளும் கட்சிக்கு விலைபோகும் வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் வாகனம் நேற்றிரவு இங்குள்ள அமைச்சர் வீட்டின் முன் நின்றதாகத் தெரிகிறது. ராகுல்காந்தி யாரை அறிவிக்கிறாரோ அவரை வெற்றி பெறச் செய்வோம், என்றனர்.

இந்தப் பரபரப்பு அடங்குவ தற்குள், கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பிய ஞானசேகரன் பேட்டியளிப்பதாக அறிவிக் கப்பட்டது.

ஆனால், திடீரென பேட்டியை ரத்துசெய்து விட்டு அவர் சிவகா சிக்குச் சென்று விட்டார். இது காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்படும் வழக்கமான உட்கட்சிப் பூசல்தான் என்கிறார்கள் அக்கட்சியினர். ஆனாலும், எளிதாகக் கிடைக்க வேண்டிய வெற்றி வாய்ப்பை உட்கட்சிப் பூசலால் காங்கிரஸ் கைவிட்டுவிடக் கூடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர் சகர்கள் கூறுகின்றனர்.

"ஜெயலலிதா அம்மாவைச் சுமப்பதில் பெருமை": 'நகை' கற்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x