Last Updated : 19 Mar, 2019 07:51 AM

 

Published : 19 Mar 2019 07:51 AM
Last Updated : 19 Mar 2019 07:51 AM

100 சதவீத வெற்றி முதல் ஒரே ஒரு தொகுதி வரை.. கிடுகிடு பள்ளத்துக்கு ‘சைக்கிளை’ ஓட்டிவந்த ஜி.கே.வாசன்

‘போட்டியிட்ட அனைத்து தொகு திகளிலும் வெற்றி’ என்ற சாதனை யோடு அரசியல் பயணத்தை தொடங்கிய தமாகா, தற்போதைய மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி யிடக்கூடிய நிலைக்கு சரிவை சந்தித்திருக்கிறது.

1996-ல் ‘அதிமுகவுடன் கூட் டணி’ என அன்றைய காங்கிரஸ் தலைவரும், பிரதமருமான பி.வி.நரசிம்மராவ் எடுத்த முடிவு, தமிழகத்தில் பெரும் அரசி யல் மாற்றத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவர் களில் ஒருவரான ஜி.கே.மூப்ப னார், அதில் இருந்து வெளி யேறி, ‘தமிழ் மாநில காங்கி ரஸ்’ (தமாகா) கட்சியை தொடங் கினார். ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மட்டுமல் லாது, 80 சதவீத காங்கிரஸ் கட்சியே தமாகாவுக்கு இடம் பெயர்ந்தது.

1996-ல் நடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 20 மக்களவைத் தொகுதிகள், 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சைக்கிள் சின்னத் தில் போட்டியிட்ட தமாகா அனைத்திலும் வென்று சாதனை படைத்தது.

1996-ல் மத்தியில் தேவகவுடா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் மூப்பனாரின் பங்க ளிப்பு அதிகம். 1997-ல் தேவகவுடா வின் ஆட்சி கவிழ்ந்ததும் பிரதமர் பதவிக்கான போட்டியில் மூப்ப னார் முதலிடத்தில் இருந்தார்.

1998 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 எம்.பி. இடங்களே கிடைத்தன. இதனால் தமாகாவின் முக்கியத் துவம் குறைந்தது. 1999 மக்கள வைத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டது. தங்கள் கூட்ட ணியில் இணையுமாறு மூப்பனா ரிடம் கருணாநிதி வற்புறுத்தினார். ஆனால், பாஜக இருக்கும் கூட்ட ணியில் இணைய மறுத்து, விசிக, ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிக ளுடன் தனி அணி அமைத்துப் போட்டியிட்டு தோல்வி அடைந் தார் மூப்பனார்.

அதிமுகவுக்கு எதிராக 1996-ல் தொடங்கப்பட்ட தமாகா, அடுத்த ஐந்தே ஆண்டுகளில், அதாவது 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட் டணி அமைத்தது. மூப்பனார் மறை வுக்குப் பிறகு, அவரது மகன் ஜி.கே.வாசன் கட்சித் தலைவரானார். 2004 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமாகாவை காங்கிரஸுடன் இணைத்தார். காங்கிரஸ் தேசிய செயலாளர், தமி ழக காங்கிரஸ் தலைவர் போன்ற பதவிகளை வகித்த ஜி.கே.வாசன், மத்தியில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் 8 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. அந்த சூழலில் ராகுல் காந்தியு டன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014 நவம்பரில் தமாகாவை மீண்டும் தொடங்கி னார் ஜி.கே.வாசன்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல் போன்ஸ், வேலூர் ஞானசேகரன் என மூத்த தலைவர்களும், முன் னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலரும் தமாகாவில் இணைந்த னர்.

2016 சட்டப்பேரவைத் தேர் தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்துடன் அக் கட்சிக்கு அனுசரணையாகவே இருந்தார் ஜி.கே.வாசன். அவர் எதிர்பார்த்ததுபோல அதி முகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.

வேறுவழியின்றி, கடைசி நேரத்தில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘தென்னந் தோப்பு’ சின்னத்தில் போட்டியிட்டு, தோல் வியை சந்தித்தது தமாகா. எஸ்ஆர்பி, பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன் உள்ளிட்டோர் தமா காவில் இருந்து வெளி யேறினர். இதனால் தமாகா மேலும் பலவீனம் அடைந்தது. இந்த சூழ லில், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள தமாகாவுக்கு தஞ் சாவூர் தொகுதி மட்டும் ஒதுக்கப் பட்டது.

1996-ல் மாபெரும் எழுச்சி யோடு முதல் தேர்தலை சந்தித்து, 100 சதவீத வெற்றியைப் பெற்ற தமாகா, 2019 மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகு தியில் மட்டுமே போட்டியிடக் கூடிய நிலைக்கு சரிவை சந்தித் திருக்கிறது என்று வேதனைப்படு கின்றனர் தொண்டர்கள்.

இந்த சூழலில், தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைத்திருப்பது மட்டுமே தொண்டர்களின் ஒரே ஆறுதல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x