Last Updated : 20 Mar, 2019 09:03 AM

 

Published : 20 Mar 2019 09:03 AM
Last Updated : 20 Mar 2019 09:03 AM

உள்ளாட்சி பதவி ஆசை காட்டிய அதிமுக, திமுக: 18 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் விட்டுத்தந்த கூட்டணி கட்சிகள்

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தேசிய கட்சிகளுக்கு மக்கள வைத் தேர்தல் முக்கியம்.

ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மேலும் இரண்டு ஆண் டுகள் ஆட்சி நீடிக்கும். திமுக இடைத் தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகளிலும் வென்றால் தமிழகத்தில் ஆட்சியைக் கைப் பற்றி 2 ஆண்டுகள் ஆட்சி செய்யலாம் எனக் கணக்குப் போடுகிறது. எனவே அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட் சிகள் இடைத்தேர்தலைத்தான் முக்கியமாகக் கருதும் நிலை ஏற் பட்டுள்ளது. இதை மனதில் வைத்துதான் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை நிறுத்தாமல் தங்க ளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளன.

மேலும் இடைத்தேர்தலில் தங்க ளுக்கு ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் முக்கியத்துவம் அளிக் கப்படும் என அதிமுக, திமுக உத்தரவாதம் அளித்துள்ளது. இது குறித்து முக்கிய கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: மதிமுக, பாமக தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.யை உறுதி செய்துள்ளன. மக்களவை வாய்ப்பு இழந்தாலும், மாநிலங்களவைக்கு தலா ஒருவர் செல்லலாம். தேமுதிக, தமாகாவுக்கு உள்ளாட்சி தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அதிமுக உறுதி அளித்துள்ளது. கூடுதல் இடங்களைப் பெற்று மக்களவை, இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாத சூழலில் உள்ளாட்சிப் பதவிகள் மூலம் தொண்டர்களை திருப்திப்படுத்தலாம் என எங்களது மூத்த நிர்வாகி கள் இடைத்தேர்தலை அதிமுக, திமுகவுக்கு விட்டுக்கொடுத் திருக்கலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x