Last Updated : 21 Mar, 2019 04:28 PM

 

Published : 21 Mar 2019 04:28 PM
Last Updated : 21 Mar 2019 04:28 PM

சைவ சாப்பாடு ரூ.70; சிக்கன் பிரியாணி ரூ.110: வேட்பாளர்களின் தேர்தல் செலவு விலை பட்டியல் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் வேட்பாளர் கள் பிரச்சாரத்துக்குப் பயன்படுத் தும் பல்வேறு பொருட்களுக்கான விலைப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், தேர்தல் பிரச்சாரத்துக்காக மொத்தம் ரூ.70 லட்சம் வரை செலவு செய்து கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. வேட்பாளர்கள், தங்கள் பெயரில் புதிய வங்கிக் கணக்குத் தொடங்கி, அதன் மூலமாகவே பிரச்சார செலவுகளை செய்திட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மைக் செட்டுக்கு ரூ.2,700வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் விலைப்பட்டியல் வழங்கப்படும். அதில், தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை மற்றும் வாடகைக் கட்டணத்தை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இந்த விலைப்பட்டியல் மாவட்டந்தோறும் மாறுபடும். சேலம் மாவட்ட விலை விவரப்பட்டியல்:ஷாமியானா நிழற்பந்தல் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.5, ரூ.8, மேடை கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.50 முதல் ரூ.300 வரை, மேடையில் வைக்கப்படும் பேக்டிராப் சதுர மீட்டருக்கு ரூ.8, பிளாஸ்டிக் சேர் ஒன்றுக்கு ரூ.9, டியூப் லைட் ஒன்றுக்கு ரூ.60, ஃபோகஸ் லைட் ஒன்றுக்கு ரூ. 400, ஸ்பீக்கருடன் கூடிய மைக் செட் ஒன்றுக்கு ரூ.2,700, நிறுத்தி வைக்கப்படும் ஃபேன் ஒன்றுக்கு ரூ.250, எல்இடி டிவி-க்கு நாளொன்றுக்கு ரூ.2,500, ஏர்கூலர் ஒன்றுக்கு சேலத்தில் பயன்படுத்திட ரூ.500, பிற பகுதிகளுக்கு ரூ.150 என வாடகை செலவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உணவு விலை விவரம்மேலும், பிரச்சாரத்தின்போது, வழங்கப்படும் உணவுகளுக்கான விலைப்பட்டியலில், சைவ சாப்பாடு ரூ.70, அசைவ சாப்பாடு ரூ.90, வெஜிடபிள் பிரியாணி ரூ.60, கலவை சாதம் ரூ.50, உப்புமா ரூ.45, இட்லி 2-க்கு ரூ.30, சப்பாத்தி (2) ரூ.50, பரோட்டா ரூ.30, வடை ரூ.15, மட்டன் பிரியாணி ரூ.130, சிக்கன் பிரியாணி ரூ.110, டீ ரூ.13, காபி ரூ.15, மினரல் வாட்டர் 1 லிட்டர் ரூ. 20 என விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

தங்கும் அறைகளுக்கான வாடகைக் கட்டணம் சிங்கிள் ரூம் ரூ.450, ஏசி ரூம் ரூ.1,200, டபுள் ரூம் ரூ.8,00, ஏசி ரூம் ரூ.1,500, ஸ்டார் ஒட்டலில் சிங்கிள் ரூம் ரூ.4,200, டபுள் ரூம் ரூ.4,300 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மல்லிகைப்பூ மாலை ஒன்றுக்கு ரூ.700, ரோஜா மாலை ஒன்றுக்கு ரூ.600, சால்வை (உல்லன்) ஒன்றுக்கு ரூ.450, சால்வை (காட்டன்) ஒன்றுக்கு ரூ.250, துண்டு (காட்டன் ) ஒன்றுக்கு ரூ.120 என விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தின்போது பயன்படுத்தும் வாகனங்களுக்கான செலவு களை கணக்கிட, கார்கள், வேன்கள், மினி பேருந்து, பேருந்து என இருக்கைகள் மற்றும் ஒவ்வொரு கம்பெனியின் வாகனத்துக்கு ஏற்ப நாள் வாடகை, ஓட்டுநர் படி, டீசல் செலவு ஆகியவையும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x