Published : 27 Mar 2019 02:21 PM
Last Updated : 27 Mar 2019 02:21 PM

நீலகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சே.மணிமேகலையின் வேட்பு மனு தள்ளுபடி

நீலகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தியாகராஜன், திமுக சார்பில் ஆ.ராசா, நாம் தமிழர் கட்சி சார்பில் சே.மணிமேகலை உட்பட 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை வேட்பு மனு பரிசீலனை பொது பார்வையாளர் ஹசன் லால் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்றது.

இதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சே.மணிமேகலையின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை முன்மொழிந்தவர்கள் முறையாக கையெழுத்து இடவில்லை என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x