Last Updated : 02 Mar, 2019 11:08 AM

 

Published : 02 Mar 2019 11:08 AM
Last Updated : 02 Mar 2019 11:08 AM

விருதுநகர் தொகுதியை முதன் முறையாக இழக்கும் வைகோ

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக மதிமுக பொதுச் செயலர் வைகோவின் கைநழுவிப் போனது விருதுநகர் தொகுதி.

அரசியல் வரலாற்றில் விருதுநகர் மாவட்டத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து மறுசீரமைப்பு செய்யப்பட்டு சிவகாசி மக்களவைத் தொகுதி உருவானது. சாத்தூர், விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகள் இதில் இடம் பெற்றிருந்தன.

கடந்த 2009-ல் சிவகாசி மக்களவைத் தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதியாக மாற்றம் பெற்றது. தற்போது இத்தொகுதியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற் றுள்ளன. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் (அப்போதைய சிவகாசி தொகுதி) கடந்த 1971-ம் ஆண்டு முதல் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய லட்சுமியும், 1980-ல் அதிமு கவைச் சேர்ந்த சவுந்த ரராஜனும், 1989-ல் அதிமுக வேட்பாளர் காளிமுத்துவும், 1991-ல் அதிமுக வேட்பாளர் கோவிந் தராஜுலுவும் போட்டியிட்டு வெற்றிபெற் றனர்.

அதன் பின்னர் 1996-ல் திமுக கூட்டணியில் இருந்த இந் திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அழகிரிசாமி வெற்றி பெற்றார். 1998-ல் மதிமுக பொதுச் செயலர் வைகோவும், 2004-ல் மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் வெற்றி பெற்றனர். அப்போது விருதுநகர் மக்களவைத் தொகுதி சிவகாசி தொகு தியாக இருந்தது குறிப்பி டத்தக்கது.

பின்னர் 2009-ம் ஆண்டில் நடைபெற்ற விருதுநகர் மக்களவைத் தேர்தலிலும் வைகோ போட்டியிட்டார். அப்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,07,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இத்தேர்தலில் வைகோ பெற்ற வாக்குகள் 2,91,423. கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் மதிமுக பொதுச் செயலர் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2,61,143 வாக்குகள் பெற்று வைகோ பின்னுக்குத் தள்ளப்பட்டார். இருப்பினும் இந்தமுறை விருதுநகர் தொகுதியை எப்படியும் கைப்பற்றுவது என்ற எண்ணத்தில் கடந்த 3 மாதங்களாக இத்தொகுதியில் விறுவிறுப்பாக தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்த மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி கைவி ட்டுப் போனது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கே விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட உள்ளதால், திருச்சியில் வைகோ போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

வைகோவின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்று வந்த விருதுநகர் முதல் முறையாக கைவிட்டுப் போனதால் வைகோ மட்டுமின்றி அக்கட்சி நிர்வாகிகளுக்கும் சிறிது வருத்தம்தான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x