Last Updated : 15 Mar, 2019 11:24 AM

 

Published : 15 Mar 2019 11:24 AM
Last Updated : 15 Mar 2019 11:24 AM

பெரியகுளத்திற்கு ‘தூண்டில்’ போடும் கட்சிகள்

பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் பெரியகுளம், தேனி, தாமரைக்குளம், வடுகபட்டி, தென்கரை, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பேரூராட்சிகளும், பெரியகுளம் ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள், தேனி ஒன்றியத்தில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அடங்கியுள்ளன. 2 லட்சத்து 64 ஆயிரத்து 787 வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

இத்தொகுதியில் அதிமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. தனித் தொகுதி என்று அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் கட்சிகளுக்குள் தடுமாற்றம் ஏற்படத் தொடங்கியது. லாசர், கதிர்காமு ஆகியோர் கடந்த காலங்களில் சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருந்து ள்ளனர்.

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கதிர்காமு டிடி.வி.தினகரன் அணிக்குச் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மருத்துவக் கல்லூரி டீனாக இருந்த இவர் எம்எல்ஏவாக செயல்பட ஆரம்பித்த நிலையிலேயே இந்த மாற்றம் அவரது அரசியல் செயல் பாட்டுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது அமமுக சார்பில் இவரே களம் காண உள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊர் என்பதால் அதிமுக இத்தொகுதியைக் கைப்பற்ற வலுவாகக் களம் இறங்கும். திமுகவைப் பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த அன்பழகன் இம்முறையும் போட்டியிட ஆர்வமாக உள்ளார். அதிமுக, திமுகவில் இருந்து ஏராளமானோர் சீட் கேட்டு விண் ணப்பித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர், இஸ்லாமியர் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால் அவர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகளை கட்சிகள் மேற் கொண்டு வரு கின்றன. தொகுதியின் பல்வேறு இடங்களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அதிகம் உள்ளன. அதிமுக, திமுக என்று இரண்டு கட்சிகளின் களமாக இருந்து வந்த பெரியகுளம் தற்போது முதல் முறையாக அமமுகவும் போட்டியில் குதித்துள்ளது. கட்சி, சின்னம் என்று பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் அமமுக இம்முறை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை மீட்டெடுக்கும் பணியில் மும்முரமாக உள்ளது.

எனவே இதன் பிரச்சார வீச்சும் தீவிரமாக இருக்கும். அதிமுக அதிருப்தி ஓட்டுக்கள் திமுகவுக்கு கிடைக்கும். நலத்திட்ட உதவிகள் மூலம் அதிமுக அதிக ஓட்டுக்களைப் பெற வாய்ப்பு உள்ளது. எஸ்டிபிஐ கூட்டணியில் உள்ளதால் இஸ்லாமியர்கள் ஓட்டுக்கள் அமமுகவுக்கு மாறும் என்று பிரதான கட்சிகள் அனைத்தும் வெவ்வேறு கணிப்புகளில் தேர்தலை எதிர்நோக்கி வருகின்றன. இதனிடையே தேனியில் உள்ள பெரியகுளம் அலுவலகம் முடக்கப்பட்டதால் பாழடைந்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x