Published : 21 Mar 2019 06:21 AM
Last Updated : 21 Mar 2019 06:21 AM

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலையும் மூடல்; தேர்தலுக்காக தலைவர்களின் சிலைகளை மறைப்பதில் குளறுபடி: தெளிவற்ற உத்தரவுகளால் தவிக்கும் தேர்தல் அலுவலர்கள்

மறைந்த தேசிய தலைவர்களின் சிலை களை மூடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தெளிவாக உத்தரவு பிறப்பிக் காததால், மாவட்டங்களில் தேர்தல் அதிகாரி கள் சிக்கலில் தவித்து வருகின்றனர்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கம்பங்கள், வளை வுகள் மற்றும் தேர்தலில் மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சிலைகளும் மூடப்படுவது வழக்கம்.

இதற்கிடையில், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக் கால தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த பிப்.28-ம் தேதி நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப் பளித்து இந்த வழக்கை முடித்துவைத்தார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 10-ம் தேதி நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தேதி கள் அறிவிக்கப்பட்டன. அன்றே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சிலைகளை மூடுவதற்கான உத்தரவுகளை வழங்கினர். இதையடுத்து முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் துணி யால் மூடப்பட்டன. சென்னை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிலைகள், அண்ணா, காம ராஜர் சிலைகள் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னையில் பிரதான பகுதிகளில் உள்ள அண்ணா சிலைகள் மறைக்கப்படவில்லை. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை மூடப்படவில்லை.

அதேநேரம் சென்னை அடுத்த குரோம் பேட்டையில் ஏனைய தலைவர்களோடு தியாகி பரணி நெல்லையப்பர் சிலையையும் மறைத்து வைத்துள்ளனர். மறைந்த தேசிய தலைவர்கள் சிலையை மூடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், சிலைகளை மூட உத்தரவு வந்தது. சிலைகளை மூடிவிட்டோம்" என்று பதிலளித்தார். மற்றொரு அதிகாரியோ, "சிலைகளை மூடிவிட்டோம். தற்போது பிரச்சினை ஏற்பட்டதால், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்" என்றார். வேறொரு அதிகாரியோ "காந்தி, நேரு, பெரியார், அப்துல்கலாம் தவிர மற்றவர்கள் சிலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான தகவலை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கேட்டபோது, ‘‘பழம்பெரும் தலைவர்களின் சிலைகள் மூடப்படுவதில்லை. அதற் கான குறிப்பிட்ட வரைமுறைகள் விதிக்கப் படவில்லை. அதேநேரத்தில் தற்போது தேர் தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மற்றவர்கள் சிலைகள் மூடப்படுகின்றன’’ என்றார்.

தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள நடத்தை விதிமுறைகளில், ‘‘பிரதமர், அமைச்சர்கள், முதல் அமைச் சர்கள் மற்றும் பிற அரசியல் நிர்வாகிகளின் புகைப்படங்களை காட்சிப்படுத்தக் கூடாது. அதேவேளையில் கடந்த கால தேசிய தலைவர்கள், கவிஞர்கள் மற்றும் முக்கியத் துவம் வாய்ந்த வரலாற்றுத் தலைவர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளு நர்கள் சிலைகளுக்கு இந்த உத்தரவை பயன்படுத்தக் கூடாது. மேலும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் முன், மத்திய, மாநில அரசுகளின் நேரடி ஆட்சிப்பகுதியின் தலைமை தேர்தல் அதிகாரியின் ஆலோச னையை பெறலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விளக்கம்தான் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. தெளிவான விளக்கம் இல்லாததால் அந்ததந்த பகுதி தேர்தல் அலுவலர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x