Published : 23 Mar 2019 13:57 pm

Updated : 23 Mar 2019 13:57 pm

 

Published : 23 Mar 2019 01:57 PM
Last Updated : 23 Mar 2019 01:57 PM

அமைச்சர் ஆதரித்துப் பேசும்போது தூங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்; வைரலாகும் வீடியோ

தன்னை அமைச்சர் ஆதரித்துப் பேசும்போது அதைச் செவிமடுக்காத மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் தூங்கி விழுந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி.


இத்தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆசைமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டலத்தில் திமுக- அதிமுக நேரடியாக மோதும் ஒரே தொகுதி மயிலாடுதுறைதான்.

இந்நிலையில் ஆசைமணியை ஆதரித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கட்சி மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆசைமணி உறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தூங்கி வழிந்தார்.

இதைப் பார்த்த கட்சி நிர்வாகிகள் கண்டும் காணாததும் போல இருந்தனர். அங்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ செ.ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் உற்சாகத்துடன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!


    அமைச்சர் ஆதரவு தூங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்வைரலாகும் வீடியோஅதிமுகதேர்தல்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x