Last Updated : 14 Mar, 2019 09:53 AM

 

Published : 14 Mar 2019 09:53 AM
Last Updated : 14 Mar 2019 09:53 AM

அதிமுகவுக்கு ஆலோசனை கூறும் உளவுத்துறை

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்துகளைவிட உளவுத் துறையின் தகவல்களை அவர் அதிகம் நம்புவார். வேட்பாளர் தேர்வு, யாருக்குச் சாதகம், பெரும்பான்மையினர், அவர்களது ஓட்டுகள் யாருக்கு செல்ல வாய்ப்பு, தொகுதி வாரியாக என்ன மாதிரி பிரச்சினைகள் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகிறது, அது யாருக்கு ஆதரவாக எதிரொலிக்கும் என்பன பற்றியெல்லாம் பல்வேறு கோணங்களில் உளவுத் துறையிடம் அறிக்கை எதிர்பார்ப்பது வழக்கம். அதற்கு முன்பு உத்தேச வேட்பாளர்கள் பட்டியல், சாதக, பாதகங்களை சேகரிக்க உளவுத் துறைக்கு ஜெயலலிதா அறிவுறுத்துவார். உளவுத் துறை தவிர, தனியார் ஏஜென்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதன் மூலம் உள்ளூர் கட்சியினர், உளவுத் துறையினருக்குத் தெரியாமலே வேட்பாளர்கள் பற்றி விசாரிக்கும் நடைமுறையும் ஜெயலலிதா காலத்தில் இருந்தது.

மேலும், மற்ற கட்சிகள் அறிவிக்கும் முன்பே தங்களது கட்சி வேட்பாளர்களை அறிவித்து, அவர்களுக்கு மக் கள், தொண்டர்களிடம் எந்த அளவு எதிர்ப்பு கிளம்புகிறது என்பதை கவனிக்கும் பின்னணி யும் பின்பற்றப்படுவது உண்டு. இதுபோன்ற பல்வேறு நடை முறைகள் இருந்தாலும், இறுதி யில் உளவுத் துறையின் தகவல் களின் அடிப்படையில் தேர்தல் களத்தை ஜெயலலிதா தீர்மானிப் பார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளார் என உளவுத் துறையினர் கூறுகின் றனர்.

அதே பாணியை தற் போதைய அதிமுக தலைமையும் ஓரளவுக்குப் பின்பற்றுகிறது. மக்களின் மனநிலை குறித்து தகவல்களை சேகரிக்க, உளவுத் துறையினருக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக உளவுத் துறை போலீஸார் பல்வேறு தகவல் களை சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து உளவுத் துறை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உளவுத் துறையின் தகவல்களை ஜெய லலிதா முழுமையாக நம்புவார். தேர்தலையொட்டி அதற்கான அதிகாரிகளும் முன்கூட்டியே நியமிக்கப்படுவர். தற்போதைய அதிமுக தலைமை குறிப்பிட்டு எதுவும் கேட்கவில்லை. என்றாலும், வழக்கமாக நாங்கள் அனுப்பும் தகவல்களை எங்களது உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகிறோம். குறிப்பாக இம்முறை அதிமுகவில் இருந்து பிரியும் ஓட்டுகளை ஈடுகட்ட என்ன வழி என்பன போன்ற சில தகவல்களை ஏற் கெனவே சேகரித்து அனுப்பி உள்ளோம். பிரியும் ஓட்டுகளை சரிகட்டவே மெகா கூட்டணியை அதிமுக ஏற்பாடு செய்தது. விமர் சனங்களைக் கடந்து தேமுதிக வுடன் அதிமுக கூட்டணி சேர்ந்த தற்கு கூட இதுவே காரணம். 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, தோல்வி நிலவரம் மாறுவது குறித்து ஜெயலலிதாவுக்கு அறிக்கை கொடுத்தோம்.

இதன் பிறகு, பிரச்சார உத்தி மாறியது. கட்சியினர் முடுக்கிவிடப்பட்டனர். இதை யடுத்து திமுகவை குறைந்த தொகுதிகளில் தோற்கடித்து அதிமுக ஆட்சியைக் கைப்பற்றி யது. மக்களவைத் தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும். வேட்பாளர், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு அறிவிப்பைப் பொறுத்து இறுதி நிலவரம் மாறலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x