Published : 22 Mar 2019 08:00 am

Updated : 22 Mar 2019 08:00 am

 

Published : 22 Mar 2019 08:00 AM
Last Updated : 22 Mar 2019 08:00 AM

ஒடிசாவில் மகளிர் சுயஉதவிக் குழு தலைவி போட்டி- எந்த பின்புலமும் இல்லாத பெண்ணை வேட்பாளராக அறிவித்தார் நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 20 ஆண்டுகளுக்கு முன் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அஸ்கா மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக மகளிர் சுயஉதவிக் குழு தலைவி ஒருவரை அறிவித் துள்ளார்.

இத் தொகுதியில் நன்கு படித்த உயர் சமூகத்துப் பெண்களை நிறுத்த வாய்ப்பிருந்தும், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத, சமூகத்தின் அடித்தட்டு பெண் ஒருவரை நவீன் பட்நாயக் வேட்பாளராக அறிவித்துள்ளார்.


ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம், நலகன்ட்டா கிராமத்தை சேர்ந்தவர் 68 வயது பிரமிளா பிசோய். 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ‘சதா சங்க்கா’ என்ற மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைவியாக உள்ளார். இவ ரது குழு அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரித்து அளித்து வருகிறது. ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலம் மட்டுமே கொண்ட பிரமிளா, தனது கணவருடன் சேர்ந்து தனது நிலத்தில் நெல், ராகி பயிரிட்டு வருகிறார். ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே இவர்களின் மாத வரு மானம் ஆகும்.

கடந்த 18 ஆண்டுகளாக மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றி வரும் இவர், தனது பகுதியில் மகளிர் குழுக்கள் அதிக எண்ணிக் கையில் உருவாகக் காரணமாக இருந்துள்ளார்.

மகளிர் குழு பணியுடன் எழுத் தறிவு, சுற்றுப்புற சுகாதாரம், குழந்தை களுக்கு தடுப்பூசி, மருத்துவமனை யில் பிரசவிக்க வேண்டியதன் அவ சியம் என பல வகையிலும் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது முயற்சியால் இவரது கிராமம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தீவிரமாகப் பணியாற்றி வரும் பிர மிளா பிசோய், தனது கிராமத்துக்கு அருகில் பகிடி மலைப் பகுதியில் செயல்படும் மயில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினராக உள் ளார். இவரது சுற்றுச்சூழல் பணிக் காக பிரக்ரிதி மித்ரா, பிரக்ரிதி பந்து ஆகிய விருதுகளை வழங்கி ஒடிசா அரசு கவுரவித்துள்ளது. பிரமிளா கிராமியக் கவிஞரும் ஆவார்.

இவருக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் திலீப் கிராமத் தில் டீக்கடை நடத்தி வருகிறார். இளைய மகன் ரஞ்சன், பைக் மெக் கானிக் கடை வைத்துள்ளார். பிரமிளா வின் 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

பிரமிளா பிசோயை வேட்பாளராக அறிவித்தது குறித்து நவீன் பட்நாயக் கூறும்போது, “பெண்கள் அதிகாரம் பெறச்செய்வதற்காக எங் கள் மாநிலத்தில் ‘மிஷன் சக்தி’ இயக் கத்தை 18 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினோம். இது எங்கள் எதிர் பார்ப்புகளையும் கடந்து 70 லட் சம் பெண்களுடன் மிகப்பெரிய இயக்கமாக வளர்ச்சி அடைந் துள்ளது. எங்கள் ‘மிஷன் சக்தி’ இயக்கத்தில் உள்ள லட்சக்கணக் கான பெண்களை கவுரவிக்கும் வகையில் பிரமிளா பிசோயை அஸ்கா தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளேன். 20 ஆண்டுகளுக்கு முன் நான் எனது அரசியல் பயணத்தை தொடங்கிய அஸ்கா தொகுதியே அவருக்கு தற்செயலாக அமைந்துவிட்டது.

நாட்டின் உயர் அதிகார அமைப்பான நாடாளுமன்றத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெறுவது அவசியம். பிர மிளா பிசோய் நாடாளுமன்றம் செல் வதைக் காண ஆவலாக உள்ளேன். நாடாளுமன்றத்தில் ஒடிசாவின் ‘மிஷன் சக்தி’ இயக்கத்தின் பிரநிதி யாக அவர் விளங்குவார் என நம்புகிறேன்” என்றார்.

அஸ்கா மக்களவை தொகுதியில் இருந்து நவீன் பட்நாயக் 3 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதற்கு முன் இத் தொகுதியில் இவரது தந்தை பிஜு பட்நாயக் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

ஒடிசாவில் பெண்களுக்கு முன் னுரிமை அளிப்பதில் பிஜு பட் நாயக் நாட்டுக்கு முன்னோடியாக விளங்கினார். அவர் தனது ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண் களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார்.

இதனை நவீன் பட்நாயக் 50 சதவீதமாக உயர்த்தினார். இந்நிலையில் ஒடிசாவில் வரும் மக்களவை தேர்தலில் தனது கட்சி சார்பில் 33 சதவீத இடங் களில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப் படுவார்கள் என நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதனால் ஒடிசா வில் இம்முறை மக்களவை தேர் தலில் போட்டியிடும் பெண் வேட் பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வுள்ளது.மகளிர் சுயஉதவிக் குழு சுயஉதவிக் குழு தலைவி போட்டி நவீன் பட்நாயக் ஒடிசா முதல்வர் அஸ்கா மக்களவை தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x