Published : 28 Mar 2019 08:03 AM
Last Updated : 28 Mar 2019 08:03 AM

நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸில் இணைந்தார்

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

முன்னதாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது காங்கிரஸில் இணையும் ஊர்மிளாவின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்த ராகுல் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, “காங்கிரஸ் கொள்கைகளை பரப்புவதில் ஊர்மிளா தனது பங்களிப்பை வழங்குவார், கட்சியை வலுப்படுத்துவார்” என்றார்.

இதையடுத்து ஊர்மிளா கூறும்போது, “நான் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டவள். எனவேதான் இக்கட்சியில் இணைந்துள்ளேன். தேர்தலுக்காக அல்ல. தீவிர அரசியலில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் ஆகியோரின் கொள்கைகள் அடிப்படையில் எனது அரசியல் கருத்துகளை வடிவமைத்த குடும்பத்தை சேர்ந்தவள் நான். நன்கு படித்த குடும்பத்தை சேர்ந்தவளாக இருப்பினும் திரைப்படத் துறையில் சேர்ந்தேன். என்றாலும் சிறுவயதில் இருந்தே நான்  சமூக விழிப்புணர்வு கொண்டவளாக இருந்தேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x