Published : 29 Mar 2019 09:37 AM
Last Updated : 29 Mar 2019 09:37 AM

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவை ‘கலங்கடிக்கும்’ அமமுக: காளிமுத்து மகனுக்கு அரசியல் அந்தஸ்து கிடைக்குமா?

மதுரையில் அமமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, அதிமுக வேட்பாளரின் வாக்குவங்கியைச் சிதைப்பார் என்று கருதப்படுவதால் அக்கட்சியினர் கலங்கிப்போய் உள்ளனர்.

மதுரை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் வேட்பாளர்களில் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை முக்கியமானவர். இவர், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் என்பது கூடுதல் சிறப்பு. காளிமுத்து தன்னுடைய 13 வயதிலே அரசியல் பேச்சாளராக அறியப்பட்டவர். அவர் பிறந்த ஊர் விருதுககர் மாவட்டம் என்றாலும் அவரது அரசியல் களம் தொடங்கியது மதுரைதான். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக தீவிரமாக கையில் எடுத்தபோது காளிமுத்து அதில் கலந்துகொண்டு அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்று கைதாகி கட்சியில் அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.

திமுகவில் எம்எல்ஏவான காளிமுத்து, எம்ஜிஆர் அதிமு கவை தொடங்கியபோது அவரு டன் இணைந்தார். எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்ற இவர், ஜெயலலிதா தலைமையின் கீழ் எம்பி மற்றும் சபாநாயகராகவும் செல்வாக்குடன் வலம் வந்தார். ஆனால், தந்தையைப்போல் டேவிட் அண்ணாதுரை அரசி யலில் விரைவாக ஜொலிக்க முடியவில்லை. அதிமுகவில் 2000-மாவது ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மதுரை மாநகர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராக இருந்த டேவிட்அண்ணாதுரை, 2007 முதல் 2017-ம் ஆண்டு வரை மதுரை மாநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலாளராகவும், தலைமைக் கழகப் பேச்சாளராகவும் இருந்தார். தந்தையைப் போல் இலக்கிய பேச்சாளர், எழுத்தாளர். ஆனால், இவரால் தற்போது வரை எம்எல்ஏ, எம்பியாக முடியவில்லை. இவருக் குப் பின் மதுரையில் அரசியலுக்கு வந்தவர்கள் அதிமுகவில் உச்ச த்தைத் தொட்டுள்ளனர். ஆனால், ஏனோ இவரது வளர்ச்சி மதுரை மாவட்டத்துக்குள்ளாகவே முடங்கிவிட்டது.

ஜெயலலிதா மருத்துவம னையில் சிகிச்சையில் இருந்த போது நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் இவர்தான் அதிமுக வேட்பாளராவார் என்று கூறப்பட்டது. ஆனால், உள்ளூர் அரசியலின் உள்ளடி வேலையால் அந்த வாய்ப்புப் பறிபோனது. தற்போது அமமுகவில் டிடிவி.தினகரனுக்கு மிக நெருக்க மானவராகவும், கட்சியில் செல் வாக்கு மிக்கவராகவும் உள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நடந்தால் அமமுகவிலும் இவர்தான் வேட்பாளராகும் நிலை இருந்தது. ஆனால், மதுரை மக்களவைத்தொகுதி அமமுக வேட்பாளராகிவிட்டார். மதுரை தொகுதி வேட்பாளர்களில் டேவிட் அண்ணாதுரை பிரச்சாரத்தால் வாக்காளர்களை ஈர்த்து வருகிறார்.

அரசியல் மேடை பேச்சாற்றல், தேர்தல் களப்பணி அனுபவமும் இருப்பதால் டேவிட் அண்ணாதுரை அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்குக் கடும் போட்டியாளராக உள்ளார். அமமுக பெறும் வாக்குகள் அதிமுகவின் வாக்குவங்கியைச் சிதைக்கும் என்பதால் அக்கட்சியினர் கலங்கிப் போய் உள்ளனர்.

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்காததால் திறந்த வெளி ஜீப் பிரச்சாரத்தை தொடங்காத டேவிட் அண்ணாதுரை, மதுரையில் தந்தை காலத்து அரசியல் நட்புகளையும், முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வரு கிறார். இவருக்காக டிடிவி.தினகரன் மதுரையில் கூடுதல் நாட்கள் பிரச்சாரம் செய்யத் திட்டமிட் டுள்ளார். அவரது பிரச்சாரமும், அமமு கவுக்கு கைகொடுக்கும் என்றும், நடுநிலை வாக்காளர்கள், அவரது சமூகம் சார்ந்த வாக்குகள் கிடைக்கும்பட்சத்தில் டேவிட் அண் ணாதுரை வெற்றியை நெருங்க வாய்ப்புள்ளதாக அக் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x