Last Updated : 21 Mar, 2019 05:01 PM

 

Published : 21 Mar 2019 05:01 PM
Last Updated : 21 Mar 2019 05:01 PM

பிரியங்கா மாலை அணிவித்த லால் பகதூர் சாஸ்திரி சிலையை கங்கை நீர் கொண்டு கழுவிய பாஜகவினர்

உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மாலை அணிவித்த லால் பகதூர் சாஸ்திரி சிலையை பாஜகவினர் கங்கை நீர் கொண்டு கழுவிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு பிரியங்கா காந்தி மாலை அணிவித்தார். இம்மாலை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மாலை என்று கூறப்படுகிறது. முன்பே பயன்படுத்திய மாலையை சாஸ்திரிஜி சிலைக்கு பிரியங்கா காந்தி அணிவித்தது கண்டனத்துக்குரியது என்று பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி ஊழல்கறை படிந்த காங்கிரஸ் குடும்பத்தைச்சேர்ந்த பிரியங்கா காந்தி தூய்மையான இந்தியாவின் இரண்டாவது பிரதமரின் சிலைக்கு மாலை அணிவிக்க என்ன தகுதியிருக்கிறது என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற அதே இடத்தில் லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு பிரியங்கா காந்தி மாலை அணிவித்ததால் சிலை தூய்மை இழந்துவிட்டது என்று கூறி கங்கை நீர் கொண்டுவந்து பாஜகவினர் கழுவினர்.இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளத்தில தனக்குப் போட்ட மாலையை எடுத்து சாஸ்திரிஜி சிலைக்கு பிரியங்கா அணிவிக்கும் காட்சிகள் விடியோவில் வலம் வந்துகொண்டிருப்பதைக் குறிப்பிட்டு உத்தரப் பிரதேச அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:

''பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாருமே இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை எப்பொழுதும் மதித்ததில்லை. பிரியங்கா காந்தி நேரு குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் இந்தியாவின் இரண்டாவது பிரதமரை அவமதித்துள்ளார்.

தனக்குப் போட்ட மாலையை எடுத்து லால் பகதூர் சிலைக்கு அணிவிக்கிறார். அவர் ஏன் ஒரு புது மாலையை சிலைக்கு அணிவிக்கவில்லை. இது சாஸ்திரி மீது அவர்களுக்கு மரியாதை இல்லை என்பதையே காட்டுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அவர்கள் எப்போதுமே சாஸ்திரிஜியை மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. 2005-ல் சாஸ்திரி நினைவுச் சின்ன்னத்தை உருவாக்கியபோது இவர்கள் மதிப்பு கொடுத்தார்களா? இல்லையே?''

இவ்வாறு உத்தரப் பிரதேச பாஜக அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ப்ரயாக்ராஜிலிருந்து வாரணாசி வரை மூன்று நாள் நீளமான 'கங்கா யாத்ரா'வில் பிரியங்கா இருந்தார். 'சஞ்சி பாத் பிரியங்கா கே சாத்' என்ற தலைப்பில் பிரியங்கா, வாரணாசியில் உள்ள அஸி காட் நகரில் 140 கிலோ மீட்டர் நீளமான நீராவிப் படகில் பயணம் செய்தார். மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸின் 'கங்கா யாத்ரா' அமைந்துள்ளது.

பாஜக திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாக காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x